துப்புரவு வேலை இஸ்லாமியர் அல்லாதோருக்கு மட்டும்… அதிர்வை ஏற்படுத்திய பாகிஸ்தான் விளம்பரம்!

பாகிஸ்தான் ராணுவத்தில் துப்புரவுப் பணியாளர் இடங்களுக்கு இஸ்லாமியர் அல்லாதோர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி இருப்பதற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி பாகிஸ்தானின் முன்னணி நாளிதழான டானில் பாகிஸ்தான் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு தொடர்பான விளம்பரம் வெளியாகி உள்ளது. அதை பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கபில்தேவ் தற்போது வெளியிட்டிருப்பது உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

dawn

அந்த விளம்பரத்தில் துப்புரவுப் பணிக்கு இஸ்லாமியர் அல்லாதோர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது மிக மோசமான இனவாத விளம்பரம் என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மிகவும் பழைய, முன்னோடியான பத்திரிகை இதுபோன்ற விளம்பரம் வெளியாவதை அனுமதிக்கலாமா? இதில் எங்கே சமூக நீதி, சமத்தும் உள்ளது? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் என்றால் அது இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், அகமதியா பிரிவினரைக் குறிக்கிறது. அவர்கள் மட்டுமே துப்புரவு வேலையை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு வற்புறுத்துவது இன, மத பாகுபாடு பார்ப்பது தவறானது என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.