துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்: பிரதமர் எங்கள் பாதங்களை கழுவ வேண்டாம், எங்களுக்கு நீதி வேண்டும்

 

துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்: பிரதமர் எங்கள் பாதங்களை கழுவ வேண்டாம், எங்களுக்கு நீதி வேண்டும்

புதுதில்லி: ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில்  ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்கள், பிரதமர் எங்கள் பாதங்களை கழுவ வேண்டாம், எங்களுக்கு நீதி வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள் பிரயாக்ராஜ் சென்ற பிரதமர் மோடி, துப்புரவு பணியாளர்களின் பாதங்களை சுத்தம் செய்த வீடியோ வைரலானது. இதனைத் தொடர்ந்து துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம் துவங்கியுள்ளது. கையால் மலம் அள்ளும் அவலமும், மலக்குழி மரணங்களும் இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த இழி தொழிலைச் செய்யும் மக்களின் துயரத்தை துடைக்காமல், பாதத்தை சுத்தம் செய்கிறார் பிரதமர் மோடி.

துப்புரவு தொழிலாளர்களின் பாதங்களை சுத்தம் செய்யும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட மோடி, தூய்மை இந்தியா திட்டத்துக்காக பாடுபடும் அனைவரையும் வணங்குகிறேன் என நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். ஆனால் துப்புரவு தொழிலாளர்கள் வாழ்க்கை மேம்பட என்ன செய்தார் என்று பார்த்தால், சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை. இந்நிலையில் துப்புரவு தொழிலாளர்கள் தங்களுக்கு நீதி வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற சத்பிரகாஷ் என்பவர், மோடி எங்கள் பாதத்தை சுத்தம் செய்வது எங்கள் பசியை போக்கிவிடுமா அல்லது நாங்கள் செய்யும் பணிக்கு ஈடாகுமா என கேள்வி எழுப்பினார். மேலும் அவர், மோடி எங்கள் பாதங்களை கழுவ வேண்டாம், எங்களுக்கு நீதி வேண்டும் என தெரிவித்துள்ளார்.