துப்பாக்கிச் சுடுதலில் மாஸ் காட்டிய ‘தல அஜித்’ : வைரலாகும் வீடியோ!

 

துப்பாக்கிச் சுடுதலில் மாஸ் காட்டிய  ‘தல அஜித்’ : வைரலாகும் வீடியோ!

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் கலந்துகொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன

துப்பாக்கிச் சுடுதலில் மாஸ் காட்டிய  ‘தல அஜித்’ : வைரலாகும் வீடியோ!

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் கலந்துகொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனான தல அஜித், சினிமாவுக்கு அடுத்தபடியாக தனது ஓய்வு நேரங்களை கார் ரேஸ், பைக் ரேஸில் செலவிடுவார். சமீபகாலமாக அவருக்கு ஏரோ மாடலிங்கில் அதிக ஆர்வம் உருவானதையடுத்து, அது குறித்த ஆராய்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.சென்னை எம்ஐடி கல்லூரியின் தக்ஷா குழுவிற்கு ஆளில்லா விமானம் வடிவமைக்கும் ஆலோசகராக நியமிக்கப்பட்ட அஜித்தின் ஆலோசனைப்படி, தக்ஷா டீம் உருவாக்கிய ஆளில்லா விமானம், உலகிலேயே அதிக நேரம் பறக்கக் கூடிய ஆளில்லா விமானம் என்ற உலக சாதனை படைத்தது.

 

சமீப காலமாகத்  துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்த  போன்ற அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின.  

மேலும் சென்னை ரைஃபில் கிளப் சார்பில் அஜித்குமார் 25 மீட்டர் பிரிவில் பங்கேற்றார். இதனையடுத்து அஜித் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் நடிகர் அஜித்துக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

 

இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி துப்பாக்கிச் சுடுதல் போட்டியான  State Rifle Championship 2019ல்  அஜித் கலந்துகொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.