துபாய் மாநகராட்சியின் புதிய உத்தரவு..! சாப்பிடும்போது ஷாக்காக போகும் ஷேக்குகள்!

துபாய் மாநகராட்சியின் புதிய உத்தரவு..! சாப்பிடும்போது ஷாக்காக போகும் ஷேக்குகள்!

துபாயில் இயங்கும் எல்லா வகை உணவகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது அந்த ஊரு மாநகராட்சி நிர்வாகம்.அதன்படி உணவுகளைப் பட்டியலிடும் மெனுக்கார்டில்,அந்த உணவில் இருக்கும் கலோரிகள் எவ்வளவு என்பதையும் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

resturant

நாட்டிலேயே இத்தகைய அறிவிப்பை செய்திருப்பது துபாய் மட்டுமே.
துபாய் அரசின் இந்த புதிய உத்தரவினால் உணவகங்கள் தாங்கள் வழங்கும் உணவு பற்றிய தகவல்களை வெளிப்படையாக்க வேண்டியிருக்கும் வாடிக்கையாளர்கள் தாங்கள் எதை உண்ண வேண்டும் என்று தீர்மானிப்பது எளிது.

menu

இதன் மூலம் எளிதாகக் கிடைப்பதாலும்,சுலபமாக வாங்க முடிகிறது என்பதாலும் ஆரோக்கியமில்லாத உணவுகைகளை உண்பது தடுக்கப்படுகிறது. அதுமட்டுமில்லை,இந்த உத்தரவினால் மக்களுக்கு சுவையான அதேசமயம் தரமான உணவு கிடைப்பதை நகராட்சி நிர்வாகம் உறுதி செய்கிறது.
இதுக்கு அப்புறம், மக்களின் நோயற்ற ஆரோக்கியமான வாழ்வுக்கு உணவகங்களும் பங்காற்ற முடியும்.இந்த உத்தரவு நவம்பரில் அமலாகிறது.அதன்படி 5 அல்லது அதற்கு மேலும் கிளைகள் உள்ள உணவகங்களில் முதலில் இந்தத் திட்டம் அமலுக்கு வரும்

2020-க்குள் பிற ஓட்டல்கள்,ரெஸ்டாரெண்ட்கள் முதல் அனைத்துவகை உணவு விற்பனை செய்யும் இடங்களும் இதை கடைபிடிக்க வேண்டி வரும்.துபாய் ஷேக்குகள் மெனுவிலிருக்கும் விலையைப் பார்த்து ஷாக்காக வாய்ப்பில்லை! ஆனால் கலோரியைப் பார்த்து ஷாக்காவது நிச்சயம்.