துபாயில் இருந்து திரும்பியவருக்கு கொரோனா உறுதி – மத்திய பிரதேசத்தில் 1,500 பேருக்கு தொற்று ஆபத்து

 

துபாயில் இருந்து திரும்பியவருக்கு கொரோனா உறுதி – மத்திய பிரதேசத்தில் 1,500 பேருக்கு தொற்று ஆபத்து

துபாயில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் மூலம் 1500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியிருக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

போபால்: துபாயில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் மூலம் 1500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியிருக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

துபாயில் இருந்து மார்ச் 17 அன்று நாடு திரும்பிய சுரேஷ் என்பவருக்கும், அவரது 11 குடும்ப உறுப்பினர்களும் மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து வந்த பின்பு  சுரேஷ் தனது இறந்த தாயின் நினைவாக 1,500 பேருக்கு மார்ச் 20 அன்று விருந்து ஏற்பாடு செய்தார். சுமார் 1,500 பேர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு விருந்தில் சாப்பிட்டனர்.

ttn

இதனால் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரால் அந்த 1500 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விருந்து நடந்த முழு காலனியையும் உள்ளூர் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சுரேஷுக்கு மார்ச் 25 அன்று கொரோனா வைரஸ் அறிகுறிகள் தோன்றின. நான்கு நாட்களுக்குப் பிறகு அவர் ஒரு மருத்துவமனைக்குச் சென்றார். இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவரும் அவரது மனைவியும் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் சுரேஷுக்கு நெருங்கிய உறவினர்களில் 23 பேரை அதிகாரிகள் பரிசோதித்தனர். அவர்களில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.