துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருக வேண்டும்: அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து

 

துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருக வேண்டும்: அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து

மக்கள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருக வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்

சென்னை: மக்கள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருக வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், வெளிச்சத்தின் திருவிழாவான தீப ஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும்  கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொண்டாட்டங்கள் எப்போதும் மகிழ்ச்சியானவை; அனைவராலும் விரும்பப்படுபவை. அத்தகையக் கொண்டாட்டங்களில் தீப ஒளிக்கு சிறப்பான இடம்  உண்டு. தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொளுத்தி, பிற மத நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்பு வழங்கும் வழக்கம் நட்பை வலுப்படுத்துவதுடன், நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்கிறது. இது தான் தீப ஒளித் திருநாளின் சிறப்பு ஆகும்.

தீப ஒளித் திருநாளின் போது மக்களிடையே நிலவும் மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் ஆண்டு முழுவதும் நீடிக்க வேண்டும். அந்த அளவுக்கு அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும். மக்கள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருக வேண்டும். மக்களிடையே அன்பு, நட்பு,  நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; நாட்டில் அமைதியும், வளமும், மகிழ்ச்சியும் பெருக வேண்டும் என வாழ்த்துகிறேன் என கூறப்பட்டுள்ளது.