துண்டு சீட்டு அனுப்பி மீடியாவிடம் சிக்கிக் கொண்ட எடப்பாடி: வைரலாகும் வீடியோ!

 

துண்டு சீட்டு அனுப்பி மீடியாவிடம் சிக்கிக் கொண்ட எடப்பாடி: வைரலாகும் வீடியோ!

சென்னை: கொடநாடு விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியன்று கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தின் போது, எஸ்டேட்டின் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் என்ற வடநாட்டு நபர் படுகொலை செய்யப்பட்டார்.

kodanad

அதன் தொடர்ச்சியாக, கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ், கொடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார் உள்ளிட்டோர் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். 

இந்த நிலையில், கொடநாடு கொள்ளை சம்பவத்தின் முக்கிய சாட்சியாக கருதப்படும் சயான் என்பவர், தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலிடம் அளித்த வாக்குமூலத்தில், கொடநாடு மர்ம மரணங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக பகிரங்கமாக தெரிவித்திருந்தார். 

eps

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து, நீண்ட நேரமாக காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசாமல் நேராக அறைக்குள் சென்ற எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்.எல்.ஏ செம்மலையை அனுப்பி பேச வைத்தார்.

அப்போது, செம்மலை பேசிக் கொண்டிருக்கையில், தன் அறையில் இருந்து துண்டு சீட்டின் மூலம் செம்மலைக்கு ஈபிஎஸ் செய்தி அனுப்பினார். அதை பார்த்துவிட்டு, செம்மலை மீண்டும் பேசத் தொடங்கினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.