துணை முதல்வருக்கு ஏன் பொறுப்பு கொடுக்கணும்! அதான் என் மகன் இருக்கானே!! கெத்துக்காட்டும் ஈபிஎஸ்…

துணை முதல்வருக்கு ஏன் பொறுப்பு கொடுக்கணும்! அதான் என் மகன் இருக்கானே!! கெத்துக்காட்டும் ஈபிஎஸ்…

அண்மை காலமாக எடப்படியின் மகன் மிதுன் தான், எடப்பாடி பழனிசாமியின் அலுவல் மற்றும் கட்சி தொடர்பான பணிகளை கவனித்துவருகிறாராம். அதனால்தான் வெளிநாடு சென்ற முதலமைச்சர் யாரையும் நம்பி பொறுப்பு கொடுக்காமல் அனைத்து பொறுப்புகளையும் அவரது மகனிடம் கொடுத்து சென்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

குடும்ப அரசியல் என திமுகவை சொல்லும் காலம் மறைந்து தற்போது அதிமுகவில் வாரிசு அரசியல் முளைத்து வருகிறது. ஜெயக்குமார் மகன, ஓபிஎஸ் மகன், ராஜன் செல்லப்பா மகன் என அரசியல் வாரிசுகள் தலைக்காட்டிவருகின்றன. அதிலும் குறிப்பாக மக்களவை தேர்தலில் நிற்கவைத்து, வெற்றிப்பெற வைத்து, தன் மகனை எம். பியாக்கிய ஓபிஎஸ் தர்மயுத்தம் போற்றுதலுக்குரியது. 

mithun

இந்தவகையில் ஓபிஎஸ் மகனுக்கு போட்டியாகவும், ரவீந்தரநாத்க்கு சமமாகவும் தனது மகனையும் அரசியலில் களமிறக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போதெல்லாம் தனது மகனையும் அழைத்து சென்று அரசியல் பாடங்களை மகனுக்கு ஊட்டிவந்துள்ளார்  எடப்பாடி. மிதுன் எல்லாத்தையும் பார்த்துக்கொள்வார்…. என அனைத்து பொறுப்புகளையும் மிதுனிடம் கொடுத்துவிட்டு லண்டனுக்கு பறந்துவிட்டார் எடப்பாடி…