துணை முதல்வராக ஆசைப்படுகிறேனா? அமைச்சர் தங்கமணி விளக்கம்

 

துணை முதல்வராக ஆசைப்படுகிறேனா? அமைச்சர் தங்கமணி விளக்கம்

துணை முதல்வராக நான் ஆசைப்படுவதாக பொய் செய்திகள் வெளிவருகின்றன. இது எதுவே உண்மையில்லை என அமைச்சர் தங்கமணி விளக்கமளித்துள்ளார். 

துணை முதல்வராக நான் ஆசைப்படுவதாக பொய் செய்திகள் வெளிவருகின்றன. இது எதுவே உண்மையில்லை என அமைச்சர் தங்கமணி விளக்கமளித்துள்ளார். 

வேலூர்  மக்களவை தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டனர். பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், “வேலூர் அதிமுக வெற்றிக் கோட்டையாக மாறும். 

நான் துணை முதல்வராக ஆசைப்படுவதாக பொய் செய்திகளை சிலர் வெளியிடுகின்றனர். எந்த பதவிக்கும் ஆசைப்படுவன் நான் இல்லை.  இந்த ஆட்சியை காப்பாற்றுவதன் எங்கள் பணி. துணை முதல்வராகும் ஆசை எனக்கில்லை. அதிமுகவை பிளவுப்படுத்த நினைப்பவர்களுக்கு ஏமாற்றம் தான் ஏற்படும்” என்று தெரிவித்தார்.