துணை முதல்வராகும் அன்புமணி… பா.ஜ.க- ஓ.பி.எஸ்- சசிகலாவை கழற்றிவிட எடப்பாடி மாஸ்டர் ப்ளான்..!

 

துணை முதல்வராகும் அன்புமணி… பா.ஜ.க- ஓ.பி.எஸ்- சசிகலாவை கழற்றிவிட எடப்பாடி  மாஸ்டர் ப்ளான்..!

2021 தேர்தலில் தனக்கு போட்டியாகவும், தன்னை அதிகாரம் செய்ய விடாமல் தடுப்பவர்களையும், கட்சியை கைப்பற்ற நினைப்பவர்கள் ஒரேயடியாக ஓரம் கட்டவும் தனித்த அடையாளத்துடன் முதல்வராக வேண்டும் என முடிவெடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

2021 தேர்தலில் தனக்கு போட்டியாகவும், தன்னை அதிகாரம் செய்ய விடாமல் தடுப்பவர்களையும், கட்சியை கைப்பற்ற நினைப்பவர்கள் ஒரேயடியாக ஓரம் கட்டவும் தனித்த அடையாளத்துடன் முதல்வராக வேண்டும் என முடிவெடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

இதற்காக அவர் போட்டிருக்கும் திட்டங்கள் அரசியல் கட்சிகளுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்க கைகோர்க்கிறார் ராமதாஸ். தமிழகத்தில் திமுக, அதிமுக தனித்து ஆட்சி என்ற நிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு கூட்டணி ஆட்சி என்ற நிலை உருவாக வேண்டும் என்பதை தனது கட்சி அளவில் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார் ராமதாஸ். அதற்கு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் ஒரு சரியான சந்தர்ப்பமாக இருக்கும் என்று இப்போது தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் கூறி வருகிறார்.OPS

2019ஆம் ஆண்டு சட்டமன்ற இடைத் தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் அதிமுகவோடு கூட்டணி வைத்தபோது பாமக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்த நிலையில் இதேபோன்றதொரு வெறும் தொகுதிக் கூட்டணியை அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அமைப்பது சரியாக இருக்காது என்று ராமதாஸ் கருதுகிறார். அதாவது 2021 சட்டமன்றத் தேர்தலைக் கூட்டணி ஆட்சி என்ற கொள்கை முழக்கத்தோடும் அதற்கு உடன்பட்ட கட்சியோடும் சந்திக்க பாமக கொள்கை அளவில் முடிவு செய்திருக்கிறது.

இதன்படி திமுகவுடன் கூட்டணி என்பது சாத்தியமற்றதாகிறது. கடந்த காலங்களில் திமுக மத்தியில் கூட்டணி ஆட்சிகளில் இருந்தபோதும், மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை ஒட்டுமொத்தமாக நிராகரித்தே வந்திருக்கிறது. சமீபத்தில் திருப்பூரில் நடைபெற்ற ஒரு மண விழாவில் பேசிய ஸ்டாலின், ‘திமுக 1971இல் பெற்றதைப் போல 200 இடங்களில் வெற்றிபெறும்’ என்று கூறுகிறார். இதன் மூலம் கூட்டணி ஆட்சி என்பதையெல்லாம் ஸ்டாலின் ஓர் அரசியல் முடிவாகக் கூட கருதவில்லை என்பது தெரிகிறது.anbumani

அதேநேரம் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் அதிமுகவில் பன்னீர்செல்வம் புதிய சக்தியாக உருவெடுக்கவில்லை. தர்ம யுத்தம் என்ற பெயரில் அவருக்கு அந்த வாய்ப்பு காலத்தால் வழங்கப் பட்டபோதும் அவர் அதைத் தொடர்ந்து பயன்படுத்தாமல் எடப்பாடி தலைமையிலான அரசுடன் இணைந்து விட்டார். எனவே ஜெயலலிதாவுக்குப் பிறகான அதிமுகவில் தலைமை தாங்கும் ஆளுமை என்ற அளவில் பன்னீர்செல்வத்தை விட எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகிக்கிறார். இப்போது தான் வகிக்கும் முதல்வர் பதவி என்பது யானை தூக்கிப்போட்ட மாலை என்பது எடப்பாடி பழனிசாமிக்கு நன்கு தெரியும்.

 ஆனால், அதற்காக அப்படியே இருந்துவிடாமல் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை தனக்கான தேர்தலாக, தன் தலைமையால் வெல்லக் கூடிய தேர்தலாக மாற்ற வேண்டும் என்பதில் உறுதியோடு இருக்கிறார் எடப்பாடி.
இந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாமக கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை முன்வைத்தால் தன் தலைமையில் ஒரு வெற்றியைக் காண காத்திருக்கும் எடப்பாடி அதற்கு எடுத்த எடுப்பிலேயே தடை சொல்லி விட மாட்டார் என்று கருதுகிறார் ராமதாஸ்.

இதன் அடிப்படையில்தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் வடமாவட்டங்களில் 80 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து அதில் அன்புமணி முப்படை அமைப்பை ஏற்படுத்தி பாமக சுமார் 50 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவுக்கு வியூகம் வகுத்து வருகிறார் ராமதாஸ்.

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக ஒரு மகத்தான வெற்றி பெற வேண்டுமென்றால் கூட்டணி ஆட்சி என்ற கொள்கை முழக்கம் எடப்பாடிக்கு மிக உபயோகமாக இருக்கும் என்றும் தைலாபுரம் தோட்டத்திலிருந்து சேலம் நெடுஞ்சாலை நகருக்குத் தகவல் சொல்லப்பட்டுள்ளது.PMK

2021 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் வேட்பாளர் அன்புமணி என்ற நிலைக்கும் பாமக தயாராகிவிட்டது. பாமக ஏற்கனவே திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்து விட்டது. அன்புமணியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி தனித்துப் போட்டியிட்டு விட்டது. ஆனாலும் தங்கள் கட்சிக்கு உரிய அங்கீகாரமும் வெற்றியும் கிடைக்கவில்லை என்பதில் டாக்டர் ராமதாஸுக்குப் பெரிய வருத்தம் இருந்து வருகிறது. இந்த நிலையில் கூட்டணி ஆட்சி என்ற கொள்கை முழக்கத்தை வைத்துத் தேர்தலைச் சந்திப்பது என்பதும் அதன் மூலம் அன்புமணியை வலுவான துணை முதல்வர் ஆக்குவது என்பதும் இப்போது ராமதாஸின் வியூகமாக இருக்கிறது.

ஸ்டாலினை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும், அதிமுகவின் அடுத்த தலைவர் தானே என்பதை நிரூபிக்க வேண்டும். ஓபிஎஸ், சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். பாஜகவை தவிர்க்க வேண்டும் என்ற அரசியல் சூழலில் கூட்டணி ஆட்சி என்ற அஸ்திரம் எடப்பாடி பழனிசாமிக்கும் தேவையான ஒன்றாகவே இருக்கிறது. எனவே, டாக்டர் ராமதாஸின் நம்பிக்கையை எடப்பாடி நிஜமாக்கினாலும் ஆச்சர்யம் இல்லை.  ஒருவேளை அன்புமணி துணை முதல்வரானால், அவர் வகிக்கும் ராஜ்ய சபா எம்.பி பதவி  அவரது மனைவிக்கு வழங்கப்படும் என்கிறார்கள்.