துணை சபாநாயகர் பதவிக்கு அடம்பிடித்த டி.ஆர்.பாலு… தூக்கி எறிந்த ஸ்டாலின்! 

 

துணை சபாநாயகர் பதவிக்கு அடம்பிடித்த டி.ஆர்.பாலு… தூக்கி எறிந்த ஸ்டாலின்! 

துணை சபாநாயகர் பதவி கேட்டு அடம்பிடித்த டி.ஆர்.பாலுவிடமிருந்த தி.மு.க முதன்மைச் செயலாளர் பதவியை மு.க.ஸ்டாலின் பறித்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவராக டி.ஆர்.பாலு உள்ளார். அது மிக முக்கியமான பணி என்பதால் அவர் வகித்துவந்த கட்சியின் முதன்மை செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

துணை சபாநாயகர் பதவி கேட்டு அடம்பிடித்த டி.ஆர்.பாலுவிடமிருந்த தி.மு.க முதன்மைச் செயலாளர் பதவியை மு.க.ஸ்டாலின் பறித்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவராக டி.ஆர்.பாலு உள்ளார். அது மிக முக்கியமான பணி என்பதால் அவர் வகித்துவந்த கட்சியின் முதன்மை செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், மு.க.ஸ்டாலின் – டி.ஆர்.பாலு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே பதவி பறிக்கப்பட்டதாக தி.மு.க வட்டாரங்கள் கூறுகின்றன.

stalin

மக்களவை துணை சபாநாயகர் பதவியானது பொதுவாக ஆதரவு எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த முறை அ.தி.மு.க-வுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது. தம்பிதுரை துணை சபாநாயகராக இருந்தார். இந்த முறை இன்னும் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படவில்லை. மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக எம்.பி-க்களை பெற்றுள்ள தி.மு.க-வுக்கு அந்த பதவியை தர பா.ஜ.க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
துணை சபாநாயகர் பதவியைப் பெற்றார் அது பா.ஜ.க பக்கம் தி.மு.க சாய்ந்துவிட்டது என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் அந்த பதவியை பெற ஸ்டாலின் மறுத்துவிட்டார். ஆனாலும், தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவுக்கு அந்த பதவியின் மீது கண் உள்ளது. பா.ஜ.க-வே தானாக முன்வந்து தருகிறேன் என்று கூறும்போது இதை ஏன் மறுக்க வேண்டும் என்று டி.ஆர்.பாலு கேட்டுவருகிறார். அதனால் ஏற்படும் பாதிப்புகளை எல்லாம் விரிவாக சொல்லியும் டி.ஆர்.பாலு கேட்பதாகத் தெரியவில்லை.

nehru

இந்த நிலையில் அவரை டம்மியாக்க மு.க.ஸ்டாலின் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற வேலைப் பளு அதிகமாக உள்ளதால், முதன்மை செயலாளர் பதவியை இரண்டாகப் பிரித்து நேருவை நியமிக்கத் திட்டமிட்டார் ஸ்டாலின். இது பற்றி தகவல் அறிந்த நேரு, தனக்கு மாவட்டச் செயலாளர் பதவியே போதும். மாநில அளவில் பதவி ஏதும் வேண்டாம் என்று கூறியுள்ளார். அதே நேரத்தில், டி.ஆர்.பாலுவோ, “இருந்தால் தனி ஆளாக இருப்பேன். இல்லை என்றால், அந்த பதவியை விட்டு விலகுகிறேன்” என்று கூறியுள்ளார். அவர் விருப்பம்போல, முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து டி.ஆர்.பாலுவை விடுவித்து, அந்த இடத்தில் நேருவை நியமித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

dmk

டி.ஆர்.பாலுவின் நாடாளுமன்ற செயல்பாடுகள் தி.மு.க மேற்கொள்ளும் அரசியலுக்கு ஏற்புடையதாக இல்லை என்று தி.மு.க-வினர் கூறுகின்றனர். குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்தின்போது அதை எதிர்த்து அறிமுக நிலையிலேயே வெளிநடப்பு செய்கிறோம் என்று டி.ஆர்.பாலு அறிவித்தார். “இந்த சட்டத்துக்கு எதிர்த்து வாக்களிக்கவில்லை என்றால் நம்மை தமிழ்நாட்டுக்குள்ளேயே அனுமதிக்க மாட்டார்கள். மிகக் கடுமையான விமர்சனம் வரும்” என்று எல்லாம் அருகில் இருந்த எம்.பி-க்கள் எடுத்துக் கூறியும் டி.ஆர்.பாலு அதை ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. பிறகு தலைமை உத்தரவின் பேரில், விவகாரத்தில் கலந்துகொண்டு பேசியதும், எதிர்த்து வாக்களித்ததும் நடந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
அதே நேரத்தில், கட்சியில் உதயநிதி ஸ்டாலின் ஆதிக்கமும் கூட டி.ஆர்.பாலு பதவி பறிக்கப்பட்டதற்குக் காரணம் என்று சிலர் கூறுகின்றனர். கட்சியில் இத்தனை ஆண்டுகள் மாவட்டச் செயலாளர்களாக இருந்தவர்களை அந்த பதவியிலிருந்து அப்புறப்படுத்தி, இளைஞர்களை அங்கு கொண்டுவர உதயநிதி திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதனால், மாவட்டங்களிலிருந்து அவர்களை வெளியேற்ற மாநில அளவில் பதவி வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. டி.ஆர்.பாலுவின் கட்சி பதவி பறிக்கப்பட்டதற்குப் பதிலாக அவரது மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்கு பதவி வழங்கப்பட உள்ளதாகவும் அடுத்த கட்டமாக பொன்முடி உள்ளிட்டவர்கள் பதவி காலியாகும் என்றும் தி.மு.க-வினர் கூறுகின்றனர்.