துடைப்பத்துடன் வந்து நின்ற அமலா பால்! 

 

துடைப்பத்துடன் வந்து நின்ற அமலா பால்! 

நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் புதிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் புதிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

நடிகை அமலா பால் கைவசம் நிறையப் படங்கள் இல்லை என்றாலும் எதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி எப்பவும் ட்ரெண்டிங்கில் உள்ளார். அதுவும் சமீபத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் டீஸர் தான் ஹாட் டாபிக்காக மாறியது. அதை பற்றிய பேச்சு அடங்குவதற்குள் படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் நிறைவடைந்தது இந்த படத்திற்கு A certificate கிடைத்துள்ளது. 

இந்த படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த ட்ரைலரை பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷியூப் வெளியிடவுள்ளார். 

மேயாத மான் புகழ்  ரத்ன குமார் இயக்கவுள்ள இந்த படத்தை V ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.