தீவு கூட கிடைக்கவில்லை… கப்பலுக்குக் கைலாசம் என்று பெயர் சூட்டிய நித்தியானந்தா!

 

தீவு கூட கிடைக்கவில்லை… கப்பலுக்குக் கைலாசம் என்று பெயர் சூட்டிய நித்தியானந்தா!

தனி நாடு உருவாக்கப்போவதாகக் கதைவிட்ட நித்தியானந்தாவை எல்லா நாட்டு போலீசாரும் தேடும் நிலை ஏற்பட்டுள்ளதால் சிறிய கப்பல் ஒன்றை வாங்கி, அதை கைலாசமாக மாற்றிவிட்டார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

தனி நாடு உருவாக்கப்போவதாகக் கதைவிட்ட நித்தியானந்தாவை எல்லா நாட்டு போலீசாரும் தேடும் நிலை ஏற்பட்டுள்ளதால் சிறிய கப்பல் ஒன்றை வாங்கி, அதை கைலாசமாக மாற்றிவிட்டார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

nithyanada

சிறுமிகள் கடத்தல், பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் பிரபல சாமியார் நித்தியானந்தா. இவர் கரீபியன் தீவுகள் பகுதியில் ஒரு சிறிய தீவை விலைக்கு வாங்கி, அதை கைலாசம் என்ற தனிநாடாக அறிவிக்கப்போவதாக கதைவிட்டார். இதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டது. லட்சக் கணக்கான மக்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதை நம்பி தனக்கு பதவி எல்லாம் வேண்டும் என்று எஸ்.வி.சேகர் உள்ளிட்டவர்கள் வீடியோ வெளியிட்டனர்.

sv sekar

ஆனால், தனித் தீவு எல்லாம் வாங்கவில்லை என்றும் அகதியாகக் கூட அவரை ஏற்க முடியாது என்றும் சில நாடுகள் தெரிவித்தன. போலி பாஸ்போர்ட்டில் தப்பித்து சென்ற நித்தியானந்தா நிழலுலக தாதாக்கள் உதவியோடு புதிய பாஸ்போர்டை வாங்கியுள்ளாராம். ஆனாலும் பெரிய நாடுகளுக்கு சென்றால் சிக்கல் என்ற நிலையில், சிறிய சொகுசு கப்பலை வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிரச்னை எல்லாம் சரியாக, தீவு ஒன்றை வாங்கி தனி நாடாக அறிவிக்கும் வரையில் இந்த சொகுசு கப்பலே கைலாசத்தின் தலைநகரமாக செயல்படும் என்று நித்தி ஆதரவாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

nithyannada

சர்வதேச கடல் எல்லையில் ஜாக்கிரதையாக நித்தியானந்தா உள்ளார். அந்த சொகுசு கப்பலிலிருந்துதான் தினமும் சத்சங்கம் மூலம் பேசுகிறார். வீடியோவை மற்றவர்கள் உதவியுடன் பதிவேற்றம் செய்து வருகிறார். இதற்காக தொழில்நுட்பம் தெரிந்த மூன்று பேரை தன்னுடன் வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. கைலாசம் நாடு தனித் தீவாக மாறியது… அதுவும் இல்லாமல் கப்பலில் சுருங்கிவிட்டது அவரது ஆதரவாளர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.