தீவில் திருமணம்: எமி ஜாக்சன் தேர்வு செய்த இடம் இதுதான்?

 

தீவில் திருமணம்: எமி ஜாக்சன் தேர்வு செய்த இடம் இதுதான்?

திருமணத்தை தீவில் நடத்த ஆசைப்பட்ட நடிகை எமி, தன் காதலனுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒரு தீவை தேர்வு செய்துள்ளார்.

சென்னை: திருமணத்தை தீவில் நடத்த ஆசைப்பட்ட நடிகை எமி, தன் காதலனுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒரு தீவை தேர்வு செய்துள்ளார்.

‘மதராசபட்டினம்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதன்பிறகு ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துவிட்டார். இந்நிலையில் இவர் ஜார்ஜ் பானியிட்டோ என்பவரை காதலித்து வந்தார். எமி ஜாக்சன் தனது காதலை புத்தாண்டு அன்று உறுதி செய்து தன் காதலனுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவு செய்தார். இவர்கள் திருமணம் வெகுவிரைவில் நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

கடற்கரை நிறைந்த தீவில் திருமணம் செய்ய வேண்டும் என்பது எமியின் ஆசை, இதற்காக அவர் தன் காதலனுடன் வெவ்வேறு இடங்களுக்கு பயணித்து வருகிறார். இதில் மிக்கோநொஸ் தீவு எமியை மிகவும் ஈர்த்துள்ளதாம், எனவே அங்குள்ள ரிசார்ட்டில் தன் திருமணத்தை நடத்த முடிவு செய்திருக்கிறார் என தெரியவந்துள்ளது.