தீவிரவாத தாக்குதல்: பிரதமர் மோடி நிகழ்சிகள் ரத்து; தில்லியில் அமைச்சர்களுடன் ஆலோசனை

 

தீவிரவாத தாக்குதல்: பிரதமர் மோடி நிகழ்சிகள் ரத்து; தில்லியில் அமைச்சர்களுடன் ஆலோசனை

புல்வாமா தாக்குதல் எதிரொலியாக பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த நிகழ்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன

புதுதில்லி: புல்வாமா தாக்குதல் எதிரொலியாக பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த நிகழ்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு திரும்பிக்கொண்டிருந்த 78 வாகனங்களில் மொத்தம் 2,500 மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்கள் பயணித்தனர். புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா பகுதியில், பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது குறி வைத்து தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 44 பாதுகாப்புப் படை வீரர்களின் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, பிரதமர் மோடி இன்று பங்கேற்க இருந்த பொதுக்கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்தியப்பிரதேச மாநிலம் இடார்சி நகரில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்வதாக இருந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, நாட்டின் பாதுகாப்பு குறித்து அமைச்சரவை குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். தில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,  மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜெட்லி, நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பாகிஸ்தானை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அணைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இது தொடர்பாக ஆலோசனை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.