தீவிரவாத அமைப்புக்கு தலைவராக வேண்டியவர் டிடிவி தினகரன்: தங்க தமிழ்ச்செல்வன் விளாசல்!

 

தீவிரவாத அமைப்புக்கு தலைவராக வேண்டியவர் டிடிவி  தினகரன்: தங்க தமிழ்ச்செல்வன் விளாசல்!

தீவிரவாத அமைப்புக்கு தலைவராக வேண்டியவர் கட்சிக்கு தலைமையாய் வந்துவிட்டார்.

டிடிவியிடம் பெட்டி பாம்பாக அடங்குவதற்கு என்ன இருக்கு. இவரு எனக்கு என்ன சோறு போடுறாரா? என்று தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசமாக பேசியுள்ளார். 

ttv

அதிமுகவிலிருந்து  பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய டிடிவி  தினகரனுடன் ஆரம்ப முதலே இருந்து வந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். எவ்வளவு பெரிய இடர்பாடுகள்  வந்தபோதும் அவருடன் இருந்த தங்க தமிழ்செல்வன்,  தற்போது தொலைபேசியில் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சிக்கும் ஆடியோ ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ttv

ஆனால், ‘கட்சியை பற்றி நான் பேசியது உண்மைதான். நான் நேர்மையானவன். சில விஷயங்களை மாற்ற வேண்டும், சரிபண்ணுங்கள் என்று சொன்னேன். அதைக் கண்டிக்காமல், சமூக வலைத்தளங்களில் தவறான செய்தியை வெளியிடும் போது மனது கஷ்டமாக இருக்கிறது. என்னை கட்சியிலிருந்து நீக்கி இருக்கலாம். ஆனால் அதைவிட்டுவிட்டு என்னை குறித்து அவதூறு பரப்புவது ஏன்? என்று  கேள்வி எழுப்பினார். 

இதுகுறித்து நேற்று டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்த போது,  ‘தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம்லாம் எடுக்க முடியாது. என்னை பார்த்தால் தங்க தமிழ்செல்வன் பெட்டிப் பாம்பாக அடங்குவார். இனி தங்க தமிழ்செல்வனிடம் விளக்கம் கேட்க முடியாது. புதிய கொள்கை பரப்பு செயலாளரை விரைவில் அறிவிக்க இருக்கிறோம். ஊடகங்கள் அவரை பேட்டி எடுத்து அவரின் பதவியை காலி செய்து விட்டன’  என்றார். 

thangam

இந்நிலையில் இது குறித்து தனியார் ஊடகத்திற்குப் பேட்டியளித்த தங்க தமிழ்செல்வன், பாண்டிச்சேரியில் எங்களை ஒருமாதம் அடைத்தீர்கள். எதற்கு அடைத்தீர்கள்? தீவிரவாத அமைப்புக்கு தலைவராக வேண்டியவர் கட்சிக்கு தலைமையாய் வந்துவிட்டார். அவர்கள் தான்  ஸ்லீப்பர் செல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அப்படி சொல்லி சொல்லி என்ன சாதித்தீர்கள். இரட்டை இலையை மீட்கவில்லை. 18 எம்.எல்.ஏக்களின் பதவிக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. வேலுமணியிடமும் தங்கமணியிடமும் நான் பேசியதே இல்லை. அவர்கள் என்னை ஆட்டிப்படைப்பதாக டிடிவி கூறுகிறார். நான் அமைதியாக அடுத்த கட்ட நடவடிக்கையைக் கவனிப்பேன். ஆனால்  எதிர்காலத்தில் அரசியல் விமர்சகராக வருவேன்.’ என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், ‘கருத்துக்களை கேட்கவில்லை என்றால் விமர்சனங்களை வைக்கத்தான் செய்வேன். அதை தலைமை ஏற்றுக்கொண்டு அழைத்து பேச வேண்டும். அதை விடுத்து டிடிவியிடம் பெட்டி பாம்பாக அடங்குவதற்கு என்ன இருக்கு. இவரு எனக்கு என்ன சோறு போடுறாரா?  தராதரம் இல்லாத பேச்சு பேசக்கூடாது’ என்று ஆவேசமாக கூறியுள்ளார்.