தீவிரமடையும் டெங்கு காய்ச்சல் : வேலூரில் 5 வயது சிறுமி உயிரிழப்பு..!

 

தீவிரமடையும் டெங்கு காய்ச்சல் : வேலூரில் 5 வயது சிறுமி உயிரிழப்பு..!

டெங்குகாய்ச்சலை தடுக்க முடியும் என்று பல கருத்துகள் எழுந்தாலும், இதுவரை ஒருவர் கூட டெங்குகாய்ச்சலில் இருந்து மீண்டு வரவில்லை.

தமிழகத்தில் மழைக் காலம் துவங்கியதால் டெங்குகாய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. டெங்குகாய்ச்சலை தடுக்க முடியும் என்று பல கருத்துகள் எழுந்தாலும், இதுவரை ஒருவர் கூட டெங்குகாய்ச்சலில் இருந்து மீண்டு வரவில்லை. டெங்குகாய்ச்சலை தடுப்பதற்குத் தமிழக அரசும் மாநகராட்சியும் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், டெங்குவால் பறிபோகும் உயிர்களைத் தடுக்க இயலவில்லை. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் டெங்குவால் மீண்டும் ஒரு சிறுமி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Anisha

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த கோனேரிகுப்பம் என்னும் பகுதியில், வசித்து வரும் சௌந்தர் என்பவரின் மூத்த மகள் அனிஷா ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ஒரு வாரமாகக் காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் அனிஷாவை, அச்சிறுமியின் பெற்றோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு, அனிஷாவுக்கு டெங்குகாய்ச்சல் உறுதி செய்யப்பட்டதையடுத்து, சிறுமியை அடுக்கம்பாறை என்னும் பகுதியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அனிஷாவை தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. டெங்குகாய்ச்சல் தீவிரம் அடைந்ததால், இன்று காலை அனிஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.