தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்படும்: திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு

 

தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்படும்: திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு

சபரி மலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறியுள்ளார்

திருவனந்தபுரம்: சபரி மலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறியுள்ளார்.

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்களையும் அனுமதிக்க வேண்டும் இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என அதிரடி உத்தரவிட்டது.உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பலரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தீர்ப்பு குறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்ம குமார் கூறுகையில், சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். இதுகுறித்து தேவசம்போர்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மதத் தலைவர்களுடன் ஆலோசித்து சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்படும் என்றார்.