தீர்ந்தது சிந்துபாத் ரிலீஸ் சிக்கல்…தானும் இளையராஜாதான் என்று நிரூபித்த யுவன் ஷங்கர் ராஜா…

தீர்ந்தது சிந்துபாத் ரிலீஸ் சிக்கல்…தானும் இளையராஜாதான் என்று நிரூபித்த யுவன் ஷங்கர் ராஜா…

இன்று நண்பகல் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ‘சிந்துபாத்’ ரிலீஸ் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தன் பங்குக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக அறிவித்ததை ஒட்டி அப்பட ரிலீஸ் உறுதியாகியுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒருநாள் முன்னதாக நாளை 27ம் தேதியே படம் தமிழகமெங்கும் ரிலீஸாகிறது.

sindhubadh

விஜய் சேதுபதி போன்ற ஹீரோக்கள் படத்துக்கு சம்பளம் வாங்காமலே சும்மா நடித்துவிடலாம் என்று சொல்லுமளவுக்கு பட ரிலீஸ் சமயத்தில் பிரச்சினைகள் வந்து வாங்கிய சம்பளத்தை அப்படியே திருப்பிக்கொடுக்கும் சம்பவங்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதற்கு முன் ரிலீஸான விஜய் சேதுபதியின் ‘96 படத்திற்கும் விஜய் சேதுபதி தண்டம் கட்டியே படம் ரிலீஸானது.

இந்நிலையில் தற்போது ரிலீஸுக்குக் காத்திருக்கும் ‘சிந்துபாத்’ படமும் ஃபைனான்ஸ் சிக்கலில் தவிக்க விஜய் சேதுபதி இருமுறை பெரிய தொகைகள் கொடுத்து உதவினார். ஆனாலும் பிரச்சினைகள் தீராத நிலையில் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பாளரை கடன் சுமையிலிருந்து மீட்க ஒரு கோடி ரூபாய் கொடுத்து உதவினார்.

yuvan

யுவனின் இந்த இடுக்கண் களைந்த உதவி வலைதளங்களில் வைரலாகப் பரவ பலரும் ‘அவரது அப்பா இளையராஜா இப்படித்தான் பணம் வாங்காமல் எத்தனையோ சிறு படத்தயாரிப்பாளர்களுக்கு வெளியே சொல்லாமல் உதவியிருக்கிறார். அந்த வகையில் இன்று யுவனும் ஒரு இளையராஜாவாக உயர்ந்திருக்கிறார்’என்று பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள். ராஜா எத்தனையோ தயாரிப்பாளர்களுக்கு பணம் வாங்காமல் இசையமைத்த விபரத்தை அவரது 75 வது பிறந்தநாள் மேடையில் ரஜினி சிலாகித்தது நினைவிருக்கலாம்.