தீயிலிருந்து லட்சக்கணக்கான புத்தகங்களைக் காப்பாற்றிய ஆடுகள்! பலே ஐடியா!

 

தீயிலிருந்து லட்சக்கணக்கான புத்தகங்களைக் காப்பாற்றிய ஆடுகள்! பலே ஐடியா!

இயற்கை எதிர்பாராத தருணங்களில் ஏற்படுத்தும் பேரழிவுகளுக்கு மனிதனால் இதுவரை நிரந்தரமான தீர்வைக் காண முடியவில்லை. எத்தனை தான் விஞ்ஞான ரீதியில் வளர்ச்சியடைந்தாலும், சமயங்களில் மனித குலத்திற்கு இயற்கை பேரழிவுகளை ஏற்படுத்தி பெரும் சவால்களை விடுகிறது. அமெரிக்காவின் பல பகுதிகளில் காட்டுத் தீ கடந்த ஒரு வார காலமாக அணையாமல் வேகமாகப் பரவி வருகிறது.

இயற்கை எதிர்பாராத தருணங்களில் ஏற்படுத்தும் பேரழிவுகளுக்கு மனிதனால் இதுவரை நிரந்தரமான தீர்வைக் காண முடியவில்லை. எத்தனை தான் விஞ்ஞான ரீதியில் வளர்ச்சியடைந்தாலும், சமயங்களில் மனித குலத்திற்கு இயற்கை பேரழிவுகளை ஏற்படுத்தி பெரும் சவால்களை விடுகிறது. அமெரிக்காவின் பல பகுதிகளில் காட்டுத் தீ கடந்த ஒரு வார காலமாக அணையாமல் வேகமாகப் பரவி வருகிறது. அந்நாட்டில் நிலவும் வறண்ட வெப்பநிலையின் காரணமாக பல பகுதிகளில் திடீர் திடீரென காட்டு மரங்கள் தீப்பற்றி எரிகின்றன. இந்நிலையில், நாட்கணக்கில் அணையாமல் தொடர்ந்து பற்றியெரியும் காட்டுத்தீயில் இருந்து நூலகத்தில் இருந்த லட்சக்கணக்கான புத்தகங்களையும் சுமார் 500 ஆடுகள், தங்களது வழக்கமான வேலைகளின் மூலம் காப்பாற்றியுள்ளன. 

america

இந்நிலையில், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலும் காட்டுப் பகுதியில் தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. அந்த பகுதியில் மலைச்சரிவில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் பெயரில் பழமையான மிகப் பெரிய நூலகம் ஒன்று இயங்கி வருகிறது. வேகமாகப் பரவிய தீ, நூலகத்தையும் தாக்கும் அபாயம் இருந்தது. இத்தனைக்கும் நூலகத்தை சுற்றிலும் எளிதாக எரியக் கூடிய புற்கள், மலைச்சரிவு பாதை என்பதால் மிக உயரமாக வளர்ந்து நிறைந்திருந்தன. வேகமாக தீ பரவிய போது, நூலகத்தில் இருந்தவர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, அருகில் இருந்த ஆட்டு மந்தையை திறந்து விட்டு, சுமார் 500 ஆடுகளை அந்தப் புற்களை மேய விட்டனர். வெகு சீக்கிரத்தில் அந்த ஆடுகள் புற்களை மேய்ந்து அதன் உயரத்தை கணிசமாகக் குறைத்தன. எளிதாக எரியக் கூடிய புதர்ச் செடிகளை  ஆடுகள் தின்று காலி செய்ததால், காட்டுத் தீ மூண்டபோதும் நூலகம் தீ விபத்திலிருந்து முழுவதுமாக காப்பற்றப்பட்டது. சுமார் 13 ஏக்கர் நிலத்தை ஆடுகள் மேய்ந்து அப்பகுதியை தீ விபத்தில் இருந்து பாதுகாத்துள்ளதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.