தீபிகா பெயரில் தோசை அறிமுகம் செய்த அமெரிக்க ஹோட்டல்!

 

தீபிகா பெயரில் தோசை அறிமுகம் செய்த அமெரிக்க ஹோட்டல்!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பெயரில் அமெரிக்க உணவகத்தில் தோசை வகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பெயரில் அமெரிக்க உணவகத்தில் தோசை வகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன், வின் டீசலுடன் ஹாலிவுட்டிலும் நடித்ததன் மூலம் உலகளவில் ரசிகர்களை வைத்துள்ளார். அதேபோல், தென்னிந்திய உணவு வகையான தோசைக்கும் உலகளவில் பிரியர்கள் இருப்பதால், பல வெளிநாடுகளில் தோசைக்கு பிரத்யேகமாக ஹோட்டல்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நடிகை தீபிகாவின் பெயரில் தோசை வகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள ‘தோசா லேப்’ எனும் உணவகத்தில் தீபிகா படுகோன் பெயரில் தோசை வகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தோசை உருளைக் கிழங்கை உள்ளே வைத்து, மேலே கார மிளகு தூவப்பட்டு ஸ்பைஸியாக இருக்கும் என ஹோட்டல் மெனுவில் உள்ளது.

deepikapadukone

இந்த மெனுவை தீபிகாவின் ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர, நடிகை தீபிகா அதை பார்த்து ஆச்சர்யப்பட்டதுடன், யாராவது பசியுடன் இருக்கிறீர்களா? என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸை தட்டியுள்ளார்.

ranveersingh

இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகரும், தீபிகாவின் கணவருமான ரன்வீர் சிங், ‘நான் இதை சாப்பிடப்போகிறேன்’ என இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.