தீபிகா படுகோன் படத்தைப் பார்ப்பேன்! – கனிமொழி பேட்டி

 

தீபிகா படுகோன் படத்தைப் பார்ப்பேன்! – கனிமொழி பேட்டி

டெல்லி ஜகஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தீபிகா படுகோன் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று வலதுசாரிகள் கூறுவதால் அவரது படத்தைப் பார்ப்பேன் என்று கனிமொழி கூறியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களை தி.மு.க எம்.பி கனிமொழி சந்தித்துப் பேசினார்

டெல்லி ஜகஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தீபிகா படுகோன் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று வலதுசாரிகள் கூறுவதால் அவரது படத்தைப் பார்ப்பேன் என்று கனிமொழி கூறியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களை தி.மு.க எம்.பி கனிமொழி சந்தித்துப் பேசினார். மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷையும் சந்தித்து கனிமொழி நலம் விசாரித்தார்.

 

 

பின்னர் கனிமொழியிடம் தீபிகா படுகோன் படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று பலர் கூறுவது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கனிமொழி, “நான் இந்தி படங்கள் பெரும்பாலும் பார்ப்பது இல்லை. ஆனால், இவர்கள் என்னைப் போன்றவர்களையும் தீபிகா படுகோன் நடித்த அந்த படத்தைப் பார்த்து, அவருக்கு ஆதரவு தெரிவிக்க வைக்கிறார்கள்” என்றார்.

delhi deepika

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவிகளை பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தன்னுடைய ஆதரவையும் தெரிவித்திருந்தார். இதனால், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து தீபிகா படுகான் தயாரித்து நடித்துள்ள சபக் படத்தைப் புறக்கணிக்க வேண்டும் வலதுசாரிகள் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.