தீபாவளி ஸ்பெஷல்: மணமணக்கும் பூசணிக்காய் அல்வா!

தீபாவளி ஸ்பெஷல்: மணமணக்கும் பூசணிக்காய் அல்வா!

பலகாரங்களும் பட்சணங்களும்தான் தீபாவளியின் ருசி கூட்டுபவை. இந்த தீபத் திருநாளில் உங்கள் வீட்டின் தித்திப்பு பன்மடங்காக, பூசணிக்காய் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க!

பலகாரங்களும் பட்சணங்களும்தான் தீபாவளியின் ருசி கூட்டுபவை. இந்த தீபத் திருநாளில் உங்கள் வீட்டின் தித்திப்பு பன்மடங்காக, பூசணிக்காய் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க!

தேவையான பொருட்கள்

  • பூசணிக்காய்  – ஒரு கப் (துருவியது)
  • சர்க்கரை – அரை கப்
  • ஏலக்காய் – ஒரு டீஸ்பூன்
  • மஞ்சள் கலர் – தேவைக்கேற்ப
  • நெய் – மூன்று கரண்டி
  • முந்திரி – தேவையான அளவு 
  • திராட்சை – தேவையான அளவு 

செய்முறை

  • கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
  • பிறகு, அதே கடாயில் பூசணிக்காய் துருவல் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
  • சில  நிமிடத்திற்குப் பிறகு சர்க்கரை சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக குழைய கிளறவும்.
  • பிறகு, அதில் நெய்யை பரவலாக  சுற்றி ஊற்றி  நன்றாக கிளறவும்.
  • பின்பு அதில் ஏலக்காய் தூள், மஞ்சள் கலர் கேசரி பவுடர்,  வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து நன்றாக கிளறி அல்வா பதம் வந்ததும் கிளறி இறக்கினால் சுவையான பூசணிக்காய் அல்வா  தயார்.