தீபாவளி ஸ்பெஷல்: நீங்களும் செய்யலாம் பனீர் முந்திரி ஜாமுன்!

தீபாவளி ஸ்பெஷல்: நீங்களும் செய்யலாம் பனீர் முந்திரி ஜாமுன்!

தீபாவளி பண்டிகை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பட்டாசும், பலகாரமும் தான். தீபாவளி பண்டிகைக்கு முன்பே பல வீடுகளில் அதிரசம், முறுக்கு எனச் செய்து அசத்துவார்கள். அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பனீர் முந்திரி குலாப் ஜாமுன்  செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம் வாங்க!

cashew

தேவையான பொருட்கள்

முந்திரி – அரை கப்

துருவிய பனீர் – இரண்டு கப்

சர்க்கரை – ஐந்து கப்

ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

நெய் – தேவைக்கேற்ப 

குங்குமப்பூ – சிறிதளவு 

செய்முறை

paneer

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, கம்பி பதம் வந்தவுடன் இறக்கவும்.

பாத்திரம் ஒன்றில் பனீர், ஏலக்காய் தூள் சேர்த்து மிருதுவாக பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி  வைத்துக் கொள்ளவும். 

jamun

பின்பு உருண்டையின் நடுவில் சிறிது முந்திரி துண்டுகள், வைத்து மூடி, கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் போட்டு பொரித்து எடுங்கள்.பிறகு பொரித்த உருண்டையை  சர்க்கரை பாவில் நனைத்து, ஊறியதும் எடுத்து , அதன் மேல்  குங்குமப்பூ தூவிப் பரிமாறவும்.