தீபாவளி ஸ்பெஷல்: சுவையான தேங்காய் லட்டு செய்யலாம் வாங்க!

தீபாவளி ஸ்பெஷல்: சுவையான தேங்காய் லட்டு செய்யலாம் வாங்க!

இனிப்புகளில் மிகவும் சுவையானது என்றால் அது லட்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை லட்டை விரும்பாதவர்களே இருக்க முடியாது. லட்டுகளில் பூந்தி லட்டு, கோவா பூந்தி லட்டு, ரவா லட்டு எனப் பலவகைகள் உள்ளன. அந்த வரிசையில் இன்று சுவையான தேங்காய் லட்டு  செய்வது எப்படி என்பதைக் காணலாம்!

தேவையான பொருட்கள்

துருவிய தேங்காய் – ஒரு கப்

சர்க்கரை – ஒரு கப்

நெய் – இரண்டு தேக்கரண்டி

முந்திரி – தேவையான அளவு 

திராட்சை – தேவையான அளவு 

ஏலக்காய் – சிறிதளவு 

செய்முறை

ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றிக் காய்ந்ததும் முந்திரி, திராட்சை போட்டு பொன்னிறம் வந்தவுடன் சர்க்கரை  சேர்த்து நன்றாகக் கிளறவும்.

சர்க்கரை உருகியதும் தேங்காய் துருவல்  சேர்த்து கைவிடாமல் ஐந்து நிமிடங்களுக்குக் கிளறவும் 

பிறகு, ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும். மிதமான சூட்டில் லட்டு பிடித்தால் சுவையான தேங்காய் லட்டு ரெடி.