தீபாவளி: லக்ஷ்மி குபேர பூஜைக்காக தயாராகும் ரத்தினமங்கலம் குபேரர் கோயில் .

 

தீபாவளி: லக்ஷ்மி குபேர பூஜைக்காக தயாராகும் ரத்தினமங்கலம் குபேரர் கோயில் .

தீபாவளியை முன்னிட்டு ரத்தினமங்கலம் ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலயத்தில் நடை பெரும் சிறப்பு லக்ஷ்மி குபேர பூஜை யினை பற்றி இந்த பதிவில் பார்போம்.

வண்டலூரை அடுத்து உள்ள ரத்தினமங்கலம் என்ற ஊரில் அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலயம் ஆகும். இக்கோயில் தமிழ்நாட்டிலேயே குபேரருக்கு என்று அமைந்துள்ள தனிகோயில் என்ற பெருமைக்குரியதாகும்.

lakshmi

இக்கோயிலில் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லக்ஷ்மி குபேர பூஜை  சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டிற்கான லக்ஷ்மி குபேர பூஜை வருகின்ற தீபாவளி பண்டிகை அன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது.

செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியையும், அதனை காக்கும் குபேரனையும் தீபாவளி திருநாளில் ஒரு சேர தரிசித்து வந்தால், அவர்கள் வாழ்வில் செல்வம் செழிக்கும்.

இந்த திருத்தலத்தில் ஸ்ரீமகாலட்சுமி, செல்வத்துக்கு கடவுள். குபேரர் அதை பராமரித்து பரிபாலனம் செய்யும் மேலாளராக உள்ளார்.இங்கு நடத்தப்படும் குபேர பூஜை, நிரந்தரமான வளத்தை அருளும் முக்கிய பூஜை ஆகும். 

lakshmijuy

குபேர பூஜையினை புதன் ஓரையில் செய்வது மிகுந்த செல்வ வளத்தினை தரும். மேலும் குபேரன் பிறந்த நட்சத்திரமாக கருதப்படும் பூச நட்சத்திரதன்றோ அல்லது வியாழக்கிழமை நாட்களிலோ வழிபாடு செய்வது மிகுந்த நன்மை தரும். 

இக்கோயிலில் லட்சுமி குபேரன் சிரித்த முகத்துடனும், அன்னை லட்சுமி, துணைவியார் சித்தரிணியுடன் காட்சி அளிக்கிறார் குபேரன்.அந்த சன்னதியை அடுத்து லட்சுமி கணபதி, குபேர லிங்கம், செல்வ முத்துக்குமரன்,யோக ஆஞ்சநேயர், நவ கிரகங்களுக்கு என தனித்தனி பிரகாரங்களும் அமைந்துள்ளது.

இங்கு மிக அழகாக ஒரு கோசாலையும் பராமரிக்கப்பட்டு வருகிறது. பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான் என்பது நமது நம்பிக்கையாகும்.

kuberan

குபேரனுடைய நடத்தையை மெச்சி, எட்டு திசைகளில்,ஒன்றான வடக்கு திசைக்கு அதிபதியாக குபேரனை நியமனம் செய்தார் பார்வதி தேவி.செல்வத்தையும்,வளத்தையும் கொடுக்கும் அதிபதியாக விளங்குகின்றார் குபேரன். அவரை வணங்கினால்,செல்வம் பெருகும்,வளம் கொழிக்கும் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கையாகும்.

திருப்பதி பாலாஜி ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் குபேரரிடம்,தன் திருமணத்திற்கு, கடன் வாங்கியதாகவும், இன்று வரை அதற்கு, வட்டி கொடுத்துக்கொண்டு இருப்பதாகவும் வரலாற்று நூல்கள் கூறுகின்றது.

அதேப்போல திருப்பதிக்கு செல்லும் முன் ரத்னமங்கலம் குபேரன் கோயிலுக்குச் சென்று லட்சுமி குபேரனை வழிபட்டுச் செல்வதும் மிகுந்த விசேஷமாகும்.

திருப்பதிக்கு சென்று வழிபட நினைப்பவர்கள், இங்கு வந்து தரிசனம் பெற்றால் திருப்பதி சென்று வரும் பலனைப்போல் இரு மடங்கு கிடைக்கும்.

kopojai