தீபாவளி பலகாரங்கள்: முள்ளு  முறுக்கு

 

தீபாவளி பலகாரங்கள்: முள்ளு  முறுக்கு

தேவையான பொருட்கள்
பச்சரிசி – 300கி
கடலைபருப்பு – 100கி
பாசிபருப்பு – 50 கி
பெருங்காயம் – 1சிட்டிகை
மிளகாய் தூள் – 2டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு

Mullu murukku

செய்முறை

பச்சரிசியை நன்றாக கழுவி காய வைத்து பருப்பை வறுத்து அரிசியுடன் சேர்த்து மிஷினில் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மாவுடன் உப்பு, பெருங்காயத் தூள், மிளகாய் தூள், காய வைத்த எண்ணெய் சிறிது சேர்த்து தண்ணீர் தெளித்து நன்கு பிசைய வேண்டும். இப்பொழுது பிசைந்து வைத்திருக்கும் மாவை முள்ளு முறுக்கு அச்சில் வைத்து, நன்றாக காய்ந்த எண்ணெயில் பிழிந்து வேக விட்டு எடுக்க வேண்டும். சுவையான, மொறு மொறுப்பான முள்ளு முறுக்கு தயார். முறுக்கு செய்வதற்காக மாவு பிசையும் போது, எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்தால் முறுக்கு நன்கு மொறுமொறுப்பாகவும், வாசனையாகவும் இருக்கும்.