தீபாவளி பண்டிகை வரலாறும் கங்கா ஸ்நானத்தின் மகிமைகளும்

 

தீபாவளி பண்டிகை வரலாறும் கங்கா ஸ்நானத்தின் மகிமைகளும்

தீபாவளி பண்டிகையின் வரலாற்று கதைகளும் அதன் பின்னால் இருக்கும்  சமூக பங்களிப்புகளையும் பற்றி இந்த பதிவில் பார்போம்.

தீ+ஆவளி தான் தீபாவளி ஆனது. அதாவது, தீபத்தை வரிசையாக அடுக்குவது என்பது இதன் பொருளாகும் .தீபாவளி இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.  நம்முடைய முன்னோர் வழிபாடு என்பது இயற்கையுடன் தொடர்புடையது.

deepawali

தென்மேற்குப் பருவமழை முடிந்து வடகிழக்குப் பருவமழை தொடங்கும் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் இயற்கை சீற்றங்கள் ஏதும் நிகழக் கூடாது என்பதற்காகவே முன்னோரை வழிபடும் இத்திருநாளை உருவாக்கினார்கள்.

ஐப்பசி அமாவாசையில் முன்னோர்களை அழைத்து கார்த்திகை பௌர்ணமியில் சீரும் சிறப்புமாகக் கொண்டாடி வழியனுப்பும் பழக்கம் ஒரு காலத்தில் இருந்துள்ளது. தற்போதும் தமிழ்நாட்டின் சில இடங்களில் இருக்கிறது.

deepavalihj

இந்தியா முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட்டாலும், ஒவ்வோர் இடத்திலும் ஒரு காரணத்துக்காகக் கொண்டாடப்படுகிறது. குஜராத்தியர்கள் தீபாவளியைப் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். வணிக நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள் தீபாவளியன்று  புதுக்கணக்கு தொடங்குகிறார்கள். 

வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் இலங்கையை ஆண்ட ராவணன் சீதையை கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால் ராமன் ராவணனை எதிர்த்துப் போராடி ராவணனை அழித்து விட்டு சீதையை மீட்டு கொண்டு தனது தம்பியான லட்சுமணனுடன் அயோத்திக்கு செல்லும் போது அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்க நாட்டில் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். 

deepavalkij

அதனால் தான் அந்த நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று ராமாயணத்தில் சொல்லப்படுகிறது. சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகவுரி விரதம் முடிவுற்றதும் அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு அர்த்தநாரீஸ்வரர் ஆக உருவெடுத்ததால் தீபாவளி கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.தமிழ்நாட்டில் நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த நாளாகக் கொண்டாடுகிறார்கள். 

deepavakijl

ஐப்பசி அமாவாசையன்று அதிகாலையில் எழுந்து, நல்லெண்ணெயில் தலை குளித்து, தீபம் ஒன்றை ஏற்றி வாளியில் வைத்து வீட்டு வாசலில் தொங்க விடவேண்டும். பின்னர் உச்சி நேரத்தில் முன்னோருக்குப் பிடித்த உணவுகளைப் படையலிட்டு அவர்களை அழைப்பது வழக்கம். ஒடிஸா மாநிலத்திலும் தீபாவளித் திருநாள் முன்னோரை வழிபடுவதற்கு உரிய நாளாகத்தான் கடைப்பிடிக்கப்படுகிறது. 

deepavalihjk

தீபாவளி கொண்டாடும் வழிமுறைகள் :

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் கங்கா குளியல் செய்வர் நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். 

deeep sweet

பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள்  விரும்புகின்றனர். அன்று அநேகபெண்களும் குறிப்பாக பட்டுப்புடவையும் ஆண்கள் வேட்டியும் உடுத்துவர். அன்றய தினம் இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர்.பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி  வாழ்த்து பெறுவர். 

deepabvghj

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம் அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும்,  லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும் குங்குமத்தில் கௌரியும், பூமாதேவியும், மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.

deepavakij

அந்த நீராடலைத்தான் கங்கா  ஸ்நானம் ஆச்சா என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம், நதிகள் ஏரிகள்,குளங்கள் மற்றும் கிணறுகளிலும், நீர்நிலைகளும் கங்கா தேவி வியாபித்து  இருப்பதாக ஐதீகம். 

gangaasaanam

பண்டைய காலங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடியதற்கான ஆதாரங்கள் ஏதும் இதுவரை இல்லை. வெடி வெடிக்கும் பழக்கம், சந்தோஷத்தை குறிப்பதற்காக ஆரம்பித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. பண்டைய நாட்களில் இலை மற்றும் வெடிமருந்து கொண்டு தயாரித்து வந்துள்ளனர்.