தீபாவளி பண்டிகை : லக்ஷ்மி குபேர பூஜையும் புதன் ஓரையின் சூட்சமமும்!

 

தீபாவளி பண்டிகை : லக்ஷ்மி குபேர பூஜையும் புதன் ஓரையின் சூட்சமமும்!

தீபாவளி பண்டிகையினை தொடர்ந்து நம் முன்னோர்களால் கடைபிடிக்கபட்டுவந்த மிக முக்கிய பூஜையாக லக்ஷ்மி குபேர பூஜை கருதப்படுகிறது.இத்தகைய பெருமைகள் வாய்ந்த லக்ஷ்மி குபேர பூஜையினை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பதினை பற்றியும்  லக்ஷ்மி குபேர பூஜையின் முக்கியத்துவங்களை பற்றியும் இந்த பதிவில் விரிவாக பார்போம்.

செல்வம் என்பது பணம், வீடு, வாசல், நகை என்பது மட்டுமல்ல. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம் முன்னோர் சொல்லி வைத்திருக்கின்றனர். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற தத்துவத்தை உணர்த்துவதே குபேர பூஜையாகும். பாற்கடலை தேவர்கள் கடைந்தபோது குபேரன் உருவானான். 

lakshmi

லட்சுமி தேவியின் அருளைப் பெற்ற அவன், வற்றாத செல்வத்துக்குச் சொந்தக்காரன் ஆனார்.கோடி புண்ணியம் தேடி தருகின்ற பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜையை குபேர பூஜையாகக் கருத சாஸ்திரத்தில் இடமிருக்கிறது. குபேர பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம்.

குபேரனது எஜமான் ஸ்ரீமன் நாராயணன் ஆவார். திருப்பதி ஸதலத்தில் சீனிவாசனாக அவதாரம் செய்து பத்மாவதியை திருமணம் செய்யும் வேளையில், எஜமானுக்கு ஒரு கோடியே 14 லட்சம் பொன் கடன் கொடுத்து பத்திரமும் எழுதி வாங்கிக்கொண்டவன் குபேரன். 

இந்தக் கடனுக்கு வட்டியாக திருப்பதி கோயிலில் குவியும் உண்டியல் பணத்தை பெற்றுக்கொண்டிருக்கிறான் என்று நம் முன்னோர்களால் நம்பப்படுகிறது .குபேர பூஜையை என்று கொண்டாடுவது என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. சிலர் தீபாவளிக்கு முதல்நாளும் சிலர் தீபாவளி அன்றும், நடத்துகின்றனர்.

 

laksnhjk

ஆனால், தீபாவளிக்கு மறுநாள் இந்த பூஜையை நடத்துவதே சிறந்தது.வளர்பிறையில் நல்ல காரியங்களைச் செய்வது வழக்கம். தீபாவளி அமாவாசை நாளில்தான் பெரும்பாலும் வருகிறது.

எனவே அதற்கு அடுத்த நாள் குபேர பூஜை செய்வதன் மூலம் செல்வ விருத்திக்கு வழிவகுக்கும்.குபேர பூஜையை ஒட்டி தங்க நகைகள் வாங்கலாம். திருமணங்கள் எல்லா மாதங்களிலும் சூன்ய மாதங்கள் தவிர நடந்தாலும் ஐப்பசியில் நடத்துவது விசேஷ அம்சம். 

பூஜையின் முறைகள் : 

கோயில்களில் யாகம் செய்யும்போது ஒரு மந்திரம் ஒலிப்பதை பலரும் கேட்டிருக்கலாம். எங்கு யாகம் ஒன்றை நடத்தும்போதும் குபேரனை அந்த இடத்திற்கு அழைக்கின்றனர். அந்தக்கோயில் கும்பாபிஷேகம் நடப்பதன் மூலம் ஊரே செழிக்க வேண்டும் என்பதே இதன் பொருள். 

பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைத்து, பூஜையறையையும் தெய்வத் திருவுருவங்களையும் மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும்.

lakshmibjk

லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும். ஸ்வாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து, அதில் நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும்.

பிறகு, சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தி வைக்க வேண்டும். வெற்றிலை,பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் அல்லது வசதி உள்ளவர்கள் தங்க நகைகளை வைக்கலாம். வெற்றிலை,பாக்கு, பழம், பஞ்சாமிர்தம், இனிப்பு பதார்த்தங்கள் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.

lakshijkk

தொடர்ந்து மஞ்சளில் அல்லது சாணப்பிள்ளையாரை பிடித்து, வாழையிலையின் வலது பக்கமாக வைக்க வேண்டும். அவருக்குக் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும்.அதன்பிறகு, முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.விநாயகரை வழிபட்ட பிறகு, மகாலட்சுமியின் ஸ்தோத்திரப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். 

ஆனைமுகனே போற்றி… விநாயகா போற்றி… அஷ்டலட்சுமியே போற்றி… குபேர லட்சுமியே போற்றி… தனலட்சுமியே போற்றி. என, அருள் தரும் தெய்வப் போற்றிகளைச் சொல்லியும் வழிபடலாம்.

ஸ்ரீகுபேர பகவானுக்கு உகந்த எண் 5 என்பதால், ஒரு தட்டில் நம் கை நிறைய 5 ரூபாய் நாணயங்களைப் போட்டு, அதைத் தட்டில் இருந்து நம் இரு கைகளாலும் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும்.

lakshmighj

அப்போது, ‘அழகாபுரி அரசே போற்றி’என்று துவங்கும் ஸ்ரீகுபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி வழிபட வேண்டும். 108 போற்றிகளையும் சொல்லி முடிக்கும் வரை தட்டில் உள்ள நாணயங்களை இரு கைகளால் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டிலேயே போடுவதுமாக இருக்க வேண்டும்.

அர்ச்சனை செய்து முடித்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயசம் ஆகியவற்றை லட்சுமி குபேரருக்கு நைவேத்யம் செய்து,கற்பூர தீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்யவேண்டும்.

தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

 பூஜைக்கு பிறகு, ஊனமுற்றவர்களுக்கோ அல்லது ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள். கோயிலுக்கு சென்று மகாலட்சுமியை வழிபட்டு வாருங்கள்.வற்றாத செல்வம் வீட்டில் தங்கும்.

லட்சுமி கடாட்சமாய் நம் வீடு என்றும் திகழ குபேர பூஜை வழிவகுத்துக் கொடுக்கும். குபேர பூஜையன்று எதுவுமே செய்ய வசதி இல்லாதவர்கள், பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே போதும்.

deepaoli

செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம். சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள்,சுத்தமான ஆடைகள் வைத்திருக்க வேண்டும்.

மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும். இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.

சென்னை வண்டலூரில் இருந்து திருப்போரூர் செல்லும் சாலையில், வண்டலூரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள ரத்னமங்கலத்தில் லட்சுமி குபேரருக்குத் தனிக்கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. லக்ஷ்மி குபேர பூஜை அன்று இக்கோயிலில் அமைந்துள்ள குபேரனை வழிபாடு செய்வது சகல செல்வங்களையும் நமக்கு தருகின்ற வழிபாடு ஆகும். 

குபேர மந்திரம் :

ராஜாதி ராஜாய பரஸ்கஞஸாஹினே,

நமோ வயம்வை சரவணாய குரம்ஹே ஸமாகா மான்

காம காமா யமக்யம் காமேஸ்வரோவை சரவணோததாது

குபேராய வைஸ்வரவணாய மஹாராஜாய நம!