தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தர்கள் வழிபாடு!

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தர்கள் வழிபாடு!

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை மற்றும் தமிழகத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அனைத்து கோயில்களிலும் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை மற்றும் தமிழகத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அனைத்து கோயில்களிலும் இன்று  அதிகாலை முதலே பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

iyyappan

தீபாவளி பண்டிகையை  கொண்டாடப்படுவதற்கான காரணங்களாக கூறப்படுவது ராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால் அந்நாட்டில் உள்ள மக்கள் ராமனை வரவேற்பதற்கு தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

diwali

மேலும் கிருஷ்ணன் நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது அந்த நரகாசுரன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதால் தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த தீபாவளி பண்டிகையானது சென்னையை சுற்றி அமைந்துள்ள திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வெள்ளீஸ்வரர் கோயில்,முண்டக கண்ணி அம்மன் கோயில், வடபழனி முருகன் கோயில்,மாங்காடு காமாட்சி அம்மன் கோயில், திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில் மற்றும்  ரெங்கநாதர் கோயில்,திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில்,ரத்தினமங்களம் ஸ்ரீ லக்ஷ்மி குபேரன் கோயில்,சிறுவாபுரி முருகன் கோவில்,பெரியபாளையம் பவானி அம்மன், கோயில் மற்றும் சென்னையை சுற்றி அமைந்துள்ள நவகிரக கோயில்களிலும் இன்று அதிகாலை முதலே சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

vinayagar

இதே போல் தமிழகத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்தலங்களாக கருதப்படும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்,இராமேஸ்வரம் ராமநாதர் கோயில்,ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயில் ,சமயபுரம் மாரியம்மன் கோயில்,பழனி முருகன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில்,கும்பகோணத்தினை சுற்றி அமைந்துள்ள நவகிரககோயில்கள்,திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்,மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து பரசித்தி பெற்ற கோயில்களிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.

perumaal

இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம்  அலை மோதுவதால் அனைத்து கோயில்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர். இதனை தொடர்ந்து கேதார கௌரி விரதம், லக்ஷ்மி குபேர பூஜை, ஐப்பசி மாத அமாவாசை ஆகிய மூன்று சிறப்பு வாய்ந்த வழிபாடுகளும் நாளை கொண்டாட பட உள்ளதால் தமிழகத்தில் அமைந்துள்ள அனைத்து கடற்கடைகோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளுக்காக தயாராகி வருகின்றது.

rameshwaram

ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் கோயில்களில் நாளை மறுநாள் அதிகாலை முதல் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க உள்ளதால் இத்தகைய புண்ணிய ஸ்தலங்களில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுவதால் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.