தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதி மாற்றம்!

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதி மாற்றம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை பல்கலைக்கழக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை பல்கலைக்கழக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வருகின்ற 6-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக தீபாவளிக்கு முந்தைய நாளான 5-ஆம் தேதியும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வு டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறும் என பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.