தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது கவனிக்க வேண்டியவை?

 

தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது கவனிக்க வேண்டியவை?

குழந்தைகள் முதல் பெரியவர் வரை வெடித்து மகிழும் பட்டாசுகளை எவ்வாறு கவனமாக வெடிக்க வேண்டும் என்பது குறித்தும், பட்டாசு வெடிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்தும் இங்கே பதிவிட்டுள்ளோம்

தீபாவளி பண்டிகை வருகிற 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே அனைவரின் நினைவுக்கு முதலில் வருவது பட்டாசு மற்றும் இனிப்பு வகைகள் தான். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதேசமயம், அதிக சத்தம் இல்லாத குறைந்த அளவில் புகையை வெளியிடும் பட்டாசுகளை வெடிக்கக் வேண்டும் எனவும், மருத்துவமனைகள், கோயில்கள் அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

இந்நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர் வரை வெடித்து மகிழும் பட்டாசுகளை எவ்வாறு கவனமாக வெடிக்க வேண்டும் என்பது குறித்தும், பட்டாசு வெடிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்தும் இங்கே பதிவிட்டுள்ளோம்.

தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது கவனிக்க வேண்டியவை:

**நல்ல ப்ராண்ட் பட்டாசுகளையே பார்த்து வாங்க வேண்டும்

**சின்ன குழந்தைகள் இருந்தால் அவர்களின் கைகளில் கிடைக்காதபடி பாதுகாப்பாக பட்டாசுகளை வைக்க வேண்டும்

**பட்டாசு வெடிக்கும் போது காட்டன் ஆடைகளையே அணிய வேண்டும்

**காலில் கண்டிப்பாக செருப்பு அணி வேண்டும்

**பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகளை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்

**நல்ல விசாலமான, வெளியிடங்களிலேயே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்

**ஒரு பக்கெட் நிறைய தண்ணீர் மற்றும் மண்ணை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்

**பட்டாசு புகையினால் கண் எரிச்சல், கண் சிவந்து விடுதல், கண்ணில் நீர் வடிதல் இருந்தால் கண்களை உடனடியாக சுத்தமான நீரினால் நன்கு கழுவ வேண்டும்

**கண்களில் எரிச்சல் போக்கக்கூடிய சொட்டு மருந்தை போடவேண்டும். உறுத்தலோ, நீர் வடிதலோ தொடர்ந்து இருந்தால், கண் மருத்துவரிடம் உடனடியாக பரிசோதிக்க வேண்டும்

**தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக சுத்தமான தண்ணீரில் காயம்பட்ட இடத்தை கழுவ வேண்டும். லேசாக தண்ணீரை ஒற்றி எடுத்துவிட்டு தீக்காயத்திற்கான க்ரீமை மேலே தடவி விட வேண்டும். பின்னர் மருத்துவரை அணுக வேண்டும்