தீபாவளி நாளில் சென்னையில் காற்று மாசு குறைவு: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

 

தீபாவளி நாளில் சென்னையில் காற்று மாசு குறைவு: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

தீபாவளி தினத்தன்று சென்னையில் காற்று மாசு குறைந்து இருப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது

டெல்லி: தீபாவளி தினத்தன்று சென்னையில் காற்று மாசு குறைந்து இருப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு கால நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தீபாவளி தினத்தன்று சென்னையில் காற்று மாசு குறைந்து இருப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில், காற்று மாசு 65 குறியீடாக பதிவாகியிருப்பதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

டெல்லியில் சராசரி காற்று மாசு 349 குறியீடு என  மிகவும் அபாய அளவில் இருப்பதாகவும், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் காற்று மாசு 87 குறியீடாக பதிவாகியிருப்பதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.