தீபாவளி டாக் டைம் சலுகையை அறிவித்தது பிஎஸ்என்எல்

 

தீபாவளி டாக் டைம் சலுகையை அறிவித்தது பிஎஸ்என்எல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது பயனாளர்களுக்கு புதிய சலுகையை குறுகிய காலத்திற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது

டெல்லி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது பயனாளர்களுக்கு புதிய சலுகையை குறுகிய காலத்திற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்பு, நிகழ்ந்த  மாற்றங்கள் ஏராளம். குறிப்பாக ஏர்டெல், வோடஃபோன், ஏர்செல்  போன்ற முன்னணி நிறுவனங்கள் பல சந்தையில் தோல்வியை தழுவின. அந்த வகையில், டெலிகாம் சந்தையில் கடுமையான போட்டியை சந்தித்து வரும் பிஎஸ்என்எல் நிறுவனம், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அதிரடி சலுகைகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது.

அந்த வகையில், பிரீபெயிட் பயனர்களுக்கு வருடாந்திர சலுகையை பிஎஸ்என்எல் நிறுவனம் அண்மையில் அறிவித்தது. அதன்படி, ரூ.1,699 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 100 எஸ்.எம்.எஸ்., உள்ளிட்டவைகளும், ரூ.2,099 சலுகையில் தினமும் 4 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்.,உள்ளிட்டவைகளும் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு சலுகைகளும் அக்டோபர் 29-ம் தேதி முதல் கிடைக்கிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது பயனாளர்களுக்கு புதிய சலுகையை குறுகிய காலத்திற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, புதிய சலுகையில் கூடுதல் டாக்டைம் மட்டுமே வழங்கப்படுகிறது. புதிய சலுகையின் கீழ் ரூ.180 சலுகையில் ரூ.190 டாக்டைம், ரூ.410 சலுகையில் ரூ.440 டாக்டைம், ரூ.510 சலுகையில் ரூ.555 மதிப்பிலான டாக்டைம் வழங்கப்படுகிறது. இந்த சலுகை அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் அக்டோபர் 25-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.