தீபாவளி சிறப்பு பேருந்துக்கான முன்பதிவு 24 ஆம் தேதி முதல் தொடக்கம்! 

தீபாவளி சிறப்பு பேருந்துக்கான முன்பதிவு 24 ஆம் தேதி முதல் தொடக்கம்! 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்களை வரும் 24 ஆம் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைக்க உள்ளார். 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்களை வரும் 24 ஆம் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைக்க உள்ளார். 

சென்னையில் கோயம்பேடு உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து வரும் 24 ஆம் தேதி முதல் 10,940 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இந்த பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்கள் வரும் 24 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காக மொத்தம் 30 சிறப்பு பேருந்து முன்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

bus

கோயம்பேடு, பேருந்து நிலையத்தில் இருந்து 26 மையங்கள் மற்றும் 30 சிறப்பு கவுண்டர்கள், தாம்பரம் சானிடோரியத்தில் 2 மையங்கள், பூவிருந்தவல்லி மற்றும் மாதாவரத்தில் தலா ஒரு மையங்களும், அமைக்கப்பட்டுள்ளன. இதே போன்று பிற ஊர்களிலிருந்து மூன்று நாட்களுக்கு 8,310 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பதிவு மையங்களுக்கு வர இயலாதவர்கள் இணைதளங்களிலிருந்தும் முன்பதிவு செய்துகொள்ளலாம் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.