தீபாவளி சிறப்பு சலுகை: 1 வருடத்திற்கு ஜியோ இலவசம்! – ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடி

 

தீபாவளி சிறப்பு சலுகை: 1 வருடத்திற்கு ஜியோ இலவசம்! – ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அந்த நிறுவனம் சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது.

மும்பை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அந்த நிறுவனம் சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சார்பாக, “இந்த தீபாவளிக்கு சலுகை பெற்று அடுத்த தீபாவளி வரை நன்மைகளை அடையுங்கள்” என்ற வகையில் சிறப்பு சலுகை திட்டத்தை அந்த நிறுவனம் அறிமுக செய்துள்ளது.

ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள அந்த புதிய திட்டத்தின் கீழ் ரூ.1699 ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடம் வரம்பற்ற இலவச குரல் அழைப்புகள் (உள்ளூர்/ வெளியூர்) பெறலாம். மேலும் இந்த திட்டதின் மூலம் 100% கேஷ்-பேக் பெறலாம். இதில் மூன்று ரூ.500 கேஷ்-பேக் கூப்பன் மற்றும் ரூ 200-க்கான ஒரு கேஷ்-பேக் கூப்பன் கிடைக்கும்.

ambani

அதாவது ரூ.1699 ரீசார்ஜ் செய்தால் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1700 கேஷ்-பேக்காக கிடைக்கும். அந்த கேஷ்-பேக் வவுச்சர்களை இந்த வருடம் டிசம்பர் 2018 வரை ரிலையன்ஸ் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோரூம்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், 1.5 ஜிபி டேட்டா என மொத்தம் 547 ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த சலுகை இன்று(அக்டோபர் 18) முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே இருக்கும்.

மேலும், ரிலையன்ஸ் ஜியோவின் மற்ற திட்டங்களுக்கும் 100% கேஷ்-பேக் வழங்கப்படுகிறது. அதில் ரூ.149, ரூ.198, ரூ.299, ரூ.349, ரூ.398, ரூ.399, ரூ.448, ரூ.449, ரூ.449, ரூ.799, ரூ.999, ரூ.1,999, ரூ.4,999 மற்றும் ரூ.9,999 திட்டங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.