தீபாவளியின் போது அரசு மருத்துவர்கள் முழு நேரமும் பணியமர்த்தப் படுவர்: அமைச்சர் விஜய பாஸ்கர்

 

தீபாவளியின் போது அரசு மருத்துவர்கள் முழு நேரமும் பணியமர்த்தப் படுவர்: அமைச்சர் விஜய பாஸ்கர்

மக்கள் ஆனந்தத்துடன் பட்டாசுகள் வெடிக்கும் போது  தீக்காயங்கள் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

தீபாவளி பண்டிகையை எதிர் நோக்கி நாடே காத்துக் கொண்டிருக்கிறது. வெளியூர்களில் தங்கி பணிபுரிபவர்களுக்காக இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளின் முன்பதிவுகள் இன்று துவங்கியுள்ளது.

Diwali

 ஜவுளிக் கடைகள், ஸ்வீட் கடைகள் என அனைத்து கடைகளிலும் தீபாவளி ஷாப்பிங்கிற்காக கூட்டம் களைக்கட்டுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசு தான். அவ்வாறு, மக்கள் ஆனந்தத்துடன் பட்டாசுகள் வெடிக்கும் போது  தீக்காயங்கள் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அரசு மருத்துவமனைகள் 24 மணி நேரமும் செயல்பட்டாலும் தீக்காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க சில நேரங்களில் மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். 

 

இத்தகைய சூழ்நிலைகளைத் தடுப்பதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்  தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘தீபாவளி பண்டிகையின் போது ஏதேனும் தீக்காயங்கள் ஏற்பட்டால் சிகிச்சை பெறுவதற்காக, தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு மருத்துவர்களும் செவிலியர்களும் முழு நேரமும் பணியமர்த்தப்படுவர்’ என்று தெரிவித்துள்ளார்.