தீபாவளியன்று வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

 

தீபாவளியன்று வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

தீபாவளியன்று வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

சென்னை: தீபாவளியன்று வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 1-ம் தேதியன்று தொடங்கியது. நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தீபாவளியன்று வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது வலுப்பெற்று புயலாக மாறுமா என்பது குறித்து உடனடியாக கணிக்க இயலாது என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒருவேளை புயலாக வலுப்பெறும் பட்சத்தில் காரைக்கால் மற்றும் தமிழக பகுதிகளில் கரையை கடக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மாலத்தீவு மற்றும் அந்தமான் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மற்றும் வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.