தீபாவளிக்கு 20,567 சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

 

தீபாவளிக்கு 20,567 சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை நவம்பர் 6-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக சென்னையில் இருப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதும், அந்த சமயம் பேருந்தில் செல்வதற்கு கடுமையான கூட்ட நெரிசலும் இருப்பது வழக்கம் இருக்கும். இதனை சமாளிப்பதற்காக வருடந்தோறும் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில் இந்த தீபாவளி பண்டிகைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் கோயம்பேடு, மாதவரம் உட்பட 30 முன்பதிவு மையங்கள் செயல்படும். 

சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். நவம்பர் 1-ம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கும். தென் மாவட்டஙகளுக்கு கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். புதுச்சேரி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா வழியாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று கே.கே.நகர் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். 

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள் செயல்படும். சென்னையில் இருந்து நவம்பர் 3,4,5 தேதிகளில் சுமார் 11,367 பேருந்துகள் இயக்கப்படும். மற்ற இடங்களில் இருந்து சென்னைக்கு 9,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசு கட்டுப்படுத்தி வருகிறது. அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்,