தீபாவளிக்கு 2 மணி வரை கடையைத் திறந்து வைக்கலாம்: மதுரை உயர் நீதி மன்றம் அனுமதி

 

தீபாவளிக்கு 2 மணி வரை கடையைத் திறந்து வைக்கலாம்: மதுரை உயர் நீதி மன்றம் அனுமதி

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் அதிகமாகத் தீபாவளிக்குத் தேவையான பொருட்களை அதிகமாக வாங்குவர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் அதிகமாகத் தீபாவளிக்குத் தேவையான பொருட்களை அதிகமாக வாங்குவர். அனைத்து கடைகள் பெரும்பாலும் இரவு 11 மணிக்கே மூடி விடும். ஆனால், பண்டிகைக் காலம் என்பதால் வியாபாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மதுரை டெக்ஸ்டைல்ஸ் கூட்டமைப்பு சங்கத்தின் செயலர் அஷ்ரத் யூசுப் என்பவர் தீபாவளியை முன்னிட்டு இரண்டு நாட்கள் அதாவது 25 மற்றும் 26 ஆம் தேதி இரவு முழுவதும் கடையைத் திறந்து வைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு அளித்திருந்தார்.

Diwali

அந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதி , தீபாவளியை முன்னிட்டு 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்களும் அதிகாலை 2 மணி வரை மதுரையில் உள்ள கடைகளைத் திறந்து வைக்கலாம் என்று அனுமதி அளித்துள்ளார்.

Madurai high court

அதனைத் தொடர்ந்து, அரசாணை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு, மற்றும் ஷிஃப்ட் முறையில் பணியாளர்களை நியமிப்பது போன்ற நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் காவல்துறையினரும் இரவு நேரத்தில் பணியாற்றுவது தொடர்பான வரம்புகளை வகுத்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.