தீபாவளிக்கு ரயில் டிக்கெட் கிடைக்கலையா ? கவலையை விடுங்க சிறப்பு ரயில்கள் இருக்கு!?

 

தீபாவளிக்கு ரயில் டிக்கெட் கிடைக்கலையா ? கவலையை விடுங்க சிறப்பு ரயில்கள் இருக்கு!?

தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து  8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

train

தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இதனால்  மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். முன்னதாக சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக  விரைவு ரயிலில் பலரும் முன்பதிவு செய்து விட்டனர். இருப்பினும் பலரது பெயர்கள் காத்திருப்பு பட்டியலில் தான் உள்ளன. 

train

இந்த நிலையில் தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அதில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து பல்வேறு இடங்களிலிருந்து  8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கையைத் தாண்டியும் கூட சிறப்பு ரயில்கள் இயக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில்  வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.