தீபாவளிக்கு முன்பே வெளியாகிறது விஜயின் பிகில் திரைப்படம்! 

 

தீபாவளிக்கு முன்பே வெளியாகிறது விஜயின் பிகில் திரைப்படம்! 

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளிப்  முன்கூட்டியே ரிலீஸாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளிப்  முன்கூட்டியே ரிலீஸாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்து நடித்துள்ள படம் பிகில். நயன்தாரா கதாநாயகியாக நடிக்க ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகப் பணியாற்றுகிறார்.

கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் விஜய் அதில் பணியாற்றிய அனைவருக்கும் தங்க மோதிரத்தைப் பரிசாக வழங்கினார். இந்த நிலையில் இந்த படம்  வரும்  தீபாவளி அன்று படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால் படத்தை முன்கூட்டியே வெளியிட்டால் விடுமுறை நாளில் வெளியிட்டால் வசூல் குவியும் என்று அக்டோபர் 24ஆம் தேதி வியாழக்கிழமை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக விஜயின் மெர்சல், சர்கார் போன்ற இரு படங்களும் 2017, 2018ஆம் ஆண்டுகளின் தீபாவளிப் பண்டிகை அன்று வெளியாகி வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.