தீபாவளிக்கு பெயர் வைத்த பிரதமர் மோடி ! சாதனை பெண்களை பாராட்டும் பாரத் கீ லட்சுமி !

 

தீபாவளிக்கு பெயர் வைத்த பிரதமர் மோடி ! சாதனை பெண்களை பாராட்டும் பாரத் கீ லட்சுமி !

இந்தியாவில் சாதனை பெண்களை உலகிற்கு அடையாளம் காட்ட இந்த தீபாவளியை பாரத் கீ லட்சுமி என்ற பெயரில் கொண்டாடுவோம் என அழைத்து விடுத்துள்ளார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.

இந்தியாவில் சாதனை பெண்களை உலகிற்கு அடையாளம் காட்ட இந்த தீபாவளியை பாரத் கீ லட்சுமி என்ற பெயரில் கொண்டாடுவோம் என அழைத்து விடுத்துள்ளார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.

 

பிரதமர் மோடியால் ஆரம்பிக்கப்பட்ட பாரத் கீ லட்சுமி என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக விளம்பர தூதுவர்காள விளங்க உள்ள பி வி சிந்து, தீபிகா படுகோனே இருவரும் சேர்ந்து ஒரு வீடியோவை தயாரித்து உள்ளார்கள்.

 

பெண்களுக்கு சரியான அதிகாரம் கிடைத்து அவர்கள் சாதிக்கும்போதுதான் இந்த சமுதாயம் உண்மையில் வளர்ச்சி அடைந்ததாகும். மோடியின் பாரத் கீ லட்சுமி முழுக்கத்திற்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், நாட்டின் அசாதாரணமான பெண்கள் சாதித்த அசாதாரண சிறப்புகளைப் பகிர்ந்து கொண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம் என பிவி சிந்து தன்னுடைய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

bharatkilakshmi

 “ஒவ்வொரு பெண்ணும் சாதிக்க ஆசைப்படும்போது சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும். இந்த தடைகளை தாண் வேண்டிய பலத்தை நாம் தேர்ந்தெடுத்த இலக்கே நமக்கு அளிக்கும். பெண்களை லட்சுமி தேவியாக மதிப்போம். பெண்கள் இருக்கும் வீடு சுக சந்தோஷங்களோடு விளங்கும். நம் நாட்டில் பெண்கள் சாதித்த சிறப்புகள் நமக்கு பெருமை அளிக்க கூடியவை. அதனால் இந்த தீபாவளியை பெண்களுக்கு அர்ப்பணிப்போம்என்று சிந்துவும் தீபிகாவும் இந்த வீடியோவில் பேசி உள்ளார்கள். மேலும் உங்களுக்குத் தெரிந்த பெண்களின் சாதனைகளை பாரத் கீ லட்சுமி ஹேஷ்டேக்கில் பதிவிடுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்கள். இந்த வீடியோவை பார்த்த பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பெண்கள் தங்கள் அதிகாரங்களை சாதிக்க வேண்டும் என்பதை எப்போதோ நம் கலாச்சாரம் சொல்லி வருகிறது. பிவி சிந்து, தீபிகா படுகோனே இருவரும் பாரத் கீ லட்சுமி முழக்கம் பற்றி அற்புதமாக விவரித்துள்ளார்கள் என்று பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளார்.