தீபாவளிக்கு சரவெடியாய் வெடிக்க வரும் ‘சர்கார்’!

 

தீபாவளிக்கு சரவெடியாய் வெடிக்க வரும் ‘சர்கார்’!

தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் நவ.6ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை: தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் நவ.6ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.6ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. சென்சாருக்கு சென்ற ‘சர்கார்’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்ததையொட்டி, தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வசூலை கருத்தில் வைத்து தொடர் விடுமுறையை பயன்படுத்திக் கொள்ள தீபாவளிக்கு முன்னரே நவ.2ம் தேதி சர்கார் படம் ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது தீபாவளி தினத்தன்று திரைப்படம் வெளியாகும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் டிரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.