தீபாவளிக்கு எந்த கலர்ல டிரஸ் போட்டால் அதிர்ஷ்டம் வரும்! தெரிஞ்சு வெச்சுக்கோங்க!

 

தீபாவளிக்கு எந்த கலர்ல டிரஸ் போட்டால் அதிர்ஷ்டம் வரும்! தெரிஞ்சு வெச்சுக்கோங்க!

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட ஒரு வாரமாகவே தடபுடலா எல்லார் வீட்லேயும்  ரெடியாகிட்டு இருப்பீங்க. புதுத்துணி இல்லாம தீபாவளியா? இந்த தீபாவளிக்கு எல்லோரும் புத்தாடை அணிந்து மகிழ்வீர்கள். ஆனா… நம்ம கிட்ட ஏற்கெனவே இல்லாத கலர்ல தேடியெடுத்து டிரஸ் வாங்குறது எல்லாம் இருக்கட்டும். தீபாவளி அன்று உங்களோட ராசிப்படி எந்த கலர்ல டிரஸ் போட்டா அடுத்த தீபாவளி வரைக்கும் அதிர்ஷ்டம் உங்களுக்கு துணை நிற்கும்னு தெரியுமா? ஒரு வேளை நீங்க எடுத்த தீபாவளி டிரஸ் இந்த கலர்ல இல்லைன்னாலும் அப்செட் ஆகாதீங்க…

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட ஒரு வாரமாகவே தடபுடலா எல்லார் வீட்லேயும்  ரெடியாகிட்டு இருப்பீங்க. புதுத்துணி இல்லாம தீபாவளியா? இந்த தீபாவளிக்கு எல்லோரும் புத்தாடை அணிந்து மகிழ்வீர்கள். ஆனா… நம்ம கிட்ட ஏற்கெனவே இல்லாத கலர்ல தேடியெடுத்து டிரஸ் வாங்குறது எல்லாம் இருக்கட்டும். தீபாவளி அன்று உங்களோட ராசிப்படி எந்த கலர்ல டிரஸ் போட்டா அடுத்த தீபாவளி வரைக்கும் அதிர்ஷ்டம் உங்களுக்கு துணை நிற்கும்னு தெரியுமா? ஒரு வேளை நீங்க எடுத்த தீபாவளி டிரஸ் இந்த கலர்ல இல்லைன்னாலும் அப்செட் ஆகாதீங்க… புது டிரஸைப் போட்டுக்கிட்டு தீபாவளியைக் கொண்டாடுங்க. தீபாவளியன்று ஏதாவது ஒரு மணி நேரம் மட்டுமாவது உங்களோட ராசிக்கு உகந்த கலர்ல டிரஸ் போட்டுக்கிட்டு பக்கத்துல இருக்கிற கோயிலுக்கு சென்று இறைவனுக்கு இதுவரைக்கும் வாழ்க்கைல கொடுத்த நல்ல விஷயங்களுக்கு நன்றி சொல்லுங்க!

deepawali dress

நம்ம டாப் தமிழ் வாசகர்களுக்காக பிரத்யேகமா எந்த கலர்ல தீபாவளியன்று ஆடை அணிந்தால் உங்களுக்கு பலன் தரும் என்று இங்கு தருகிறோம். அப்படி உங்களோட ராசியைப் பார்க்கும் போது, உங்களோட பிறந்த லக்னத்தை வெச்சு பாருங்க. உங்களோட லக்ன அமைப்பு தான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும். 
மேஷம், சிம்மம், தனுஷ் லக்னத்தில் பிறந்தவர்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் ஆடைகளை அணியலாம். 

rasi

அடுத்ததாக ரிஷபம், கன்னி, மகரம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பலன் தரும் நிறம் வெள்ளை, பச்சை, கருப்பு. எனவே நீங்கள் இந்த நிறங்களையோ, இந்த நிறங்களின் கலவைகளையோ பயன்படுத்தி நலமாக வாழ வாழ்த்துகள். மிதுனம், துலாம், கும்பம் போன்ற லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கைகொடுக்கும் வண்ணம் பச்சை, ஊதா, நீலம். எனவே நீங்கள் இந்த வண்ணங்களை பயன்படுத்தி வளமுடன் வாழுங்கள்
அடுத்ததாக கடகம், விருச்சிகம், மீனம் லக்னத்தில் பிறந்தவர்கள் வெள்ளை, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களைப் பயன்படுத்தலாம். உங்களுக்கு இந்த நிறங்களிலான ஆடைகள் பலன் தரும். எனவே இந்த வண்ணங்களை பயன்படுத்தி வளமுடன் வாழுங்கள். இங்கு லக்னங்களை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். தயவு செய்து உங்களோட ராசியை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்!