தீபாவளிக்கு எத்தனைச் சிறப்பு பேருந்துகள்? எப்போது முன்பதிவு தொடக்கம்? அமைச்சர் அறிவிப்பு

 

தீபாவளிக்கு எத்தனைச் சிறப்பு பேருந்துகள்? எப்போது முன்பதிவு தொடக்கம்? அமைச்சர் அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து 11,367 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து 11,367 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

வருகின்ற நவம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னை உள்ளிட்ட வெளி ஊர்களில் பணியில் இருப்பவர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்வது வழக்கம்.

இந்நிலையில், இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், “சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து நவம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் 11,367 பேருந்துகள் இயக்கப்படும். பிற ஊர்களிலிருந்து மற்ற ஊர்களுக்குச் செல்ல 9,200 பேருந்துகள் இயக்கப்படும். 

நவம்பர் 1-ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்குகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கட உள்ளது.

கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி பேருந்து நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல், தீபாவளி முடிந்து ஊருக்குத் திரும்புவதற்காக 11,842 பேருந்துகள் இயக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.