தீபாவளிக்கான சிறப்புப் பேருந்துகள் நாளை மறுநாள் இயக்கம்…!

 

தீபாவளிக்கான சிறப்புப் பேருந்துகள் நாளை மறுநாள் இயக்கம்…!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், மக்கள் ஆரவாரமாகப் புத்தாடை வாங்குவதிலும் பட்டாசுகள் வாங்குவதிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், மக்கள் ஆரவாரமாகப் புத்தாடை வாங்குவதிலும் பட்டாசுகள் வாங்குவதிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு போடப் பட்டுள்ளது. வெளியூருக்குச் செல்லும் பயணிகளுக்காகத் தீபாவளியை முன்னிட்டு 10,940 சிறப்புப் பேருந்துகள் இயக்கப் படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. 

Bus

தீபாவளி சிறப்புப் பேருந்துக்கான முன்பதிவுகள் கோயம்பேட்டில் 26 முன்பதிவு மையங்களும், தாம்பரம் சானிடோரியத்தில் 2 முன்பதிவு மையங்களும், மாதவரம் மற்றும் பூந்தமல்லியில் தலா ஒரு பூந்தமல்லி என சென்னை முழுவதும் 30 பேருந்து முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு, கடந்த வாரமே சிறப்புப் பேருந்துக்கான முன்பதிவுகள் துவங்கிய நிலையில், பேருந்துகளை முன்பதிவு செய்துவிட்டு பயணிகள் ஊருக்குச் செல்வதற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தீபாவளிக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கம்  நாளை மறுநாள், அதாவது 24 ஆம் தேதி முதல் துவங்குகிறது.