தீபங்கள் ஏற்றிய வெளிநாட்டு தூதரகங்கள்….. மெகா ஹிட் அடித்த மோடியின் ஒற்றுமை வேண்டுகோள்

 

தீபங்கள் ஏற்றிய வெளிநாட்டு தூதரகங்கள்….. மெகா ஹிட் அடித்த மோடியின் ஒற்றுமை வேண்டுகோள்

பிரதமர் மோடியின் ஒற்றுமை வேண்டுகோளை ஏற்று, நம் நாட்டில் உள்ள வெளிநாட்டு தூதரங்களிலும் தூதர்கள் விளக்குகளை ஏற்றி நாம் அனைவரும் கொரோனாவுக்கு எதிரான போரில் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தினர்.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நாம் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்த வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (நேற்று) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்து தீபம், மெழுகுவர்த்தி, டார்ச் மற்றும் செல்போன் லைட்டை ஒளிரசெய்ய வேண்டும் என பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தீபம் ஏற்றிய வெளிநாட்டு தூதர்கள்

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, நாட்டு மக்கள் அனைவரும் நேற்று இரவு சரியாக 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு வீடுகளில் தீபம், மெழுவர்த்தி ஏற்றினர், டார்ச் லைட் மற்றும் செல்போன் லைட்டுகளை 9 நிமிடங்கள் ஒளிர செய்தனர். மோடியின் இந்த கோரிக்கையை ஏற்று இந்தியாவில் பல வெளிநாட்டு தூதரகங்களிலும் வெளிநாட்டு தூதர்கள் தீபத்தை ஏற்றி கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தினர்.

இஸ்ரேல் தூதரகத்தில் தீபம்

நம் நாட்டில் உள்ள சீனா, ஐரோப்பிய யூனியன், ஆப்கானிஸ்தான், இஸ்ரேல் மற்றும் போலந்து உள்பட பல வெளிநாட்டு தூதரகங்களில் அந்நாட்டின் தூதர்கள் நேற்று தீபம் ஏற்றி கொரோனவுக்கு எதிரான போரில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தினர். இதன் மூலம் மோடியின் ஒற்றுமை வேண்டுகோள் மெகா வெற்றி பெற்றது.