தீபக் மிஸ்ரா மனைவிக்கு மல்லிகை பூ, அல்வா பார்சல்! – இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கைது

 

தீபக் மிஸ்ரா மனைவிக்கு மல்லிகை பூ, அல்வா பார்சல்! – இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கைது

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மனைவிக்கு மல்லிகை பூ, அல்வா பார்சல் அனுப்ப முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மனைவிக்கு மல்லிகை பூ, அல்வா பார்சல் அனுப்ப முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருமணம் ஆன ஆண், பெண் வேறு யாருடனாவது உறவு வைத்துக் கொள்வது கிரிமினல் குற்றமல்ல என கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட ஐந்து நீதிபதிகளின் அமர்வு வழங்கிய இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று மாலை விழுப்புரம் தலைமை தபால் நிலையம் முன்பு இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புகுழு செயலாளர் ஆசைத்தம்பி, மாவட்ட தலைவர்கள் கடலூர் தேவா, விழுப்புரம் பாலாஜி முருகன், புதுவை மாநில தலைவர் மஞ்சினி மற்றும் கட்சி நிர்வாகிகள் திரண்டனர்.

vilupuram

அதன்பின், அந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி தீபக் மிஸ்ராவின் டெல்லி முகவரிக்கு அல்வா மற்றும் மல்லிகை பூ பார்சல் அனுப்ப உள்ளதாக கூறி தபால் நிலையம் உள்ளே நுழைந்தனர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆசைத்தம்பி உள்ளிட்ட 7 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.