தீதும் நன்றும் பிறர்தர வாரா..! இதோ இன்றைக்கான புரோமோ 

 

தீதும் நன்றும் பிறர்தர வாரா..! இதோ இன்றைக்கான புரோமோ 

சென்னை: பிக் பாஸ் 3 யின் இன்றைக்கான முதல்  புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி வெற்றிகரமாக 41 வது நாளாய் எட்டியுள்ளது. இரண்டு சீசன் போலவே  கமல்ஹாசனே இந்த சீசன்யும் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா மற்றும் மீரா ஆகியோர் வெளியேறியுள்ளனர். 

இந்த நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் கவின், சாக்சி, அபிராமி, ரேஷ்மா, மற்றும் மதுமிதா ஆகியோர் உள்ளனர். அதில் நேற்று மதுமிதா காப்பாற்றப்பட்டதாகக் கமல்ஹாசன் அறிவித்தார். இந்த நிலையில் தற்போது இன்றைக்கான முதல்  புரோமோ வெளியாகியுள்ளது. 

அதில் கமல்ஹாசன், ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா. நாம் செய்தது எல்லாம் முன் செய்தது என்று நம்பிக்கை. இது இந்த வீட்டில் இருப்பவர்களுக்குப் புரியவில்லையா என்பது தெரியவில்லை. இப்போ eviction’ என்று கூறுகிறார். வழக்கத்துக்கு மாறாக இவர் மிகவும் கண்டிப்பாகப் பேசுவதால் ஹவுஸ் மேட்ஸ் பயத்தோடு அமர்ந்துள்ளனர்.